Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பது தான் இங்கு நடக்கிறது! தமிழிசை சவுந்தர்ராஜன்

    ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பது தான் இங்கு நடக்கிறது! தமிழிசை சவுந்தர்ராஜன்

    புதுச்சேரியில் சகோதர சகோதரிகளுக்குள் வரும் பிரச்சினை தான், இது வீட்டிற்குள் இருக்கின்ற சின்ன சின்ன சம்பவம் தானே தவிர இதில் மக்களை பாதிக்கும் பிரச்சினை இல்லை என முதல்வர் ரங்கசாமி கருத்துக்கு தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். மேலும் முதல்வர் மனைஉளைச்சலில் இருப்பதை நேரடியாக அவரிடம் கேட்டு அதை சரி செய்வேன் என கூறிய அவர், ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு தான் கொண்டாட்டம் என்பது தான் இங்கு நடக்கிறது என்றார்.

    புதுச்சேரியில் செய்திகளை சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மக்கள் நல திட்டங்களை அதிகாரிகள் தடுப்பதாக முதல்வர் ரங்கசாமி கூறிய கருத்து தொடர்பாக பேசினார். அப்போது பாஸ்ட் புதுச்சேரியாக புதுச்சேரி முன்னேறி வருகிறது. யார் என்ன விமர்சனங்கள் வைத்தாலும் நான் மக்களுக்கான கோப்புகள் எதுவாக இருந்தாலும் அதை புறம் தள்ளுவது இல்லை. நான் துணைநிலை ஆளுநராக வரும்போது பென்ஷன், உதவித்தொகை பல கோப்புகள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. அதையெல்லாம் ஒன்றொன்றாக நிறைய தீர்வு செய்துள்ளோம். அதுமட்டுமின்றி இன்று 1400 கோடி ரூபாய் மத்திய அரசிடம் இருந்து கொடுப்பதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    மேலும் முதல்வர் தனக்கு என்ன சிரமம் இருக்கிறதோ அதை சொல்லிவிட்டார். அதிகாரிகள் சில பிரச்சினைகளினால் காலதாமதம் செய்வதாக குறிப்பிட்டார். அதுயெல்லாம் சரி செய்யப்படும். நான் இன்று புதுச்சேரிக்கு வந்துள்ளேன். நாளை நான், முதலமைச்சர் மற்றும் அதிகாரிகள் எல்லாம் அமர்ந்து எங்கே காலதாமதம் ஆகிறது என்பதை கண்டறிந்து சரி செய்துவிடுடோம் என்று கூறிய அவர், இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லை. இது சகோதர சகோதரிகளுக்கள் வரும் பிரச்சினை தான், இது வீட்டிற்குள் இருக்கின்ற சின்ன சின்ன சம்பவம் தானே தவிர இதில் மக்களை பாதிக்கும் பிரச்சினை எதுவுமே ஒன்றும் நடக்கவில்லை என்றும், என்னிடம் ஒரு கோப்பு வந்ததென்றால் அதை நான் கோப்பாக பார்ப்பதில்லை. மக்கள் நலன் சார்ந்த மக்களின் முகமாகத்தான் பார்க்கிறேன் என்றும், மக்கள் நல திட்ட கோப்புகள் தவிர்த்து சில கோப்புகள் மக்களை பாதிக்கிறது என்பதால் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். எல்லா விதத்திலும் மக்கள் பாதிக்கிறார்கள் என்ற அளவிற்கு எதுவுமே நடத்தவில்லை. புதுச்சேரி சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கிறது. நல்லாட்சி நடந்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு எல்லா விதத்திலும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சலில் இருப்பதாகவும், என்னை பொறுத்தவரை மாநில அந்தஸ்த்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அது இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது என்றும், முதலமைச்சர் ரங்கசாமி ஏன் மன உளைச்சலாக இருக்கிறார் என்பதை நேரடியாக கேட்டு அதில் எதாவது பிரச்சினை இருந்தால் அதை உடனடியாக தீர்த்து வைக்க கூடிய மனநிலை என்னிடம் இருக்கிறது. அதற்கான திறமையும் என்னிடம் இருக்கிறது என்றார். மேலும் ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வது போல அவரும் எனக்கும், மத்திய ஆட்சிக்கும் இங்குள்ள ஆட்சிக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. அண்ணன் தங்கச்சி, அக்கா தப்பிக்குள் வரும் பிரச்சினை தான் இது. இதை வெளியில் யாரும் வந்து கொண்டாடுவதற்கு விட மாட்டோம் என்று கூறிய அவர், குறிப்பாக துணை நிலை மாநிலங்களுக்கு சில அதிகார பகிர்வு இருக்கிறது.

    அதற்கென்று ஒரு கொள்கை, வழிமுறை, நெறிமுறை இருக்கிறது. அதை தீடிரென்று மாற்றிவிட முடியாது. ஆனாலும் மற்ற ஆளுநர்கள் போல அதிகாரத்தை நிச்சயமாக நான் பயன்படுத்தவில்லை. நான் அன்பாகவும் மக்களுக்கு வேண்டியதை தான் செய்து கொண்டிருக்கின்றேன் என்று கூறிய அவர், நான் சர்க்கரை கொடுத்து கொள்வேன் என நாராயணசாமி கூறியதற்கு பதிலளித்த அவர், நான் சர்க்கரை கொடுப்பேன் என கூறியதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கொள்வதற்காக சர்க்கரை கொடுக்கமாட்டேன். சர்க்கரை கொடுத்து கொள்ள முடியுமா? என துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

    துணிவு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் எப்படியிருக்கும் தெரியுமா? – வெளிவந்த அப்டேட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....