Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 13 பேர் காயம்; எந்த அமைப்பின் சதி இது?

    பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 13 பேர் காயம்; எந்த அமைப்பின் சதி இது?

    பாகிஸ்தான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் நேற்றிரவு குண்டு வெடித்ததில் 13 பேர் காயமடைந்தனர். 

    பாகிஸ்தான் பாலுசிஸ்தான் மாகாணத்தில் குர்ஸ்தர் மாவட்டத்தில் நேற்றிரவு நடைபெற்ற சந்தையில் திடீரென இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. 

    இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இதுவரை இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

    பாகிஸ்தானில் தற்போது தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பாக இருக்கும் பாகிஸ்தான் தெரிக்-இ-தலிபான் அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு கைபர்-பக்கதுவா மாகாணத்தில் பன்னு நகரில் இருக்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியது. மேலும் அந்த பயங்கரவாத அமைப்பு அங்குள்ள அதிகாரிகளை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    அதே சமயம் அங்குள்ள பயங்கரவாதிகள், ஆப்கானித்தான் செல்ல அனுமதித்தால் மட்டுமே அவர்களை விடுவிக்க முடியும் என கெடு கொடுத்துள்ளனர்.

    3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படையினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....