Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பணிநீக்க நடவடிக்கையில் களமிறங்கிய ஐபிஎம்; அதிர்ச்சியில் ஊழியர்கள்!

    பணிநீக்க நடவடிக்கையில் களமிறங்கிய ஐபிஎம்; அதிர்ச்சியில் ஊழியர்கள்!

    உலகளவில் பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் ஐபிஎம் நிறுவனம் 3900 பணியாளர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    உலகம் முழுவதும் பணவீக்க அபாயம் ஏற்பட உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த அபாயத்திலிருந்து தப்பிப்பதற்காக பிரபலமான பல மென்பொருள் நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. 

    இந்த பணிநீக்க செயலில், அமேசான், கூகுள், ஸ்விக்கி, மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், மெட்டா, ஸ்பாட்டிஃபை போன்ற பிரபல நிறுவனங்களும் அடங்கும். இந்த வரிசையில் தற்போது  பிரபல தொழில்நுட்ப நிறுவனமாக விளங்கி வரும் ஐபிஎம் நிறுவனமும் இணைந்துள்ளது. 

    முதலீட்டு நடவடிக்கைகளுக்காக 3900 பணியாளர்களை பணிநீக்கம்  செய்யப்படுவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் எண்ணிக்கையில் 1.5 சதவிகிதம் ஆகும். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான ஊதியங்கள் புதிய முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதைச்சார்ந்த அறிவிப்பை, அந்நிறுவனம் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். 

    மோதப்போகும் தனுஷ் மற்றும் செல்வராகவன்- வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....