Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇந்தியாவின் பழமையான மொழி தமிழ்- ஆளுநர் ஆர்.என்.ரவி

    இந்தியாவின் பழமையான மொழி தமிழ்- ஆளுநர் ஆர்.என்.ரவி

    இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

    சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேஸ்தரா பவுண்டேஷன் வளாகத்தில் ‘விட்டஸ்டா 2023’ நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அவரது மனைவியும் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

    அப்போது நிகழ்ச்சியில், பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, வேற்றுமையில் ஒற்றுமை என்பது அரசியல் வார்த்தை மட்டும் இல்லை என்றும் அதில் நம் வாழ்வியலும் அடங்கும் என்றும் தெரிவித்தார். 

    அதோடு, காஷ்மீருக்கும் தமிழ் நாட்டிற்கும் பல தொடர்புகள் இருப்பதாகவும், இந்தியாவின் பழமையான மொழி தமிழ் என்றும் கூறினார். 

    மேலும் அவர், 18 ஆம் நூற்றாண்டு முன்பு வரை பொருளாதாரத்தில் தலை சிறந்த நாடாக இந்தியா இருந்திருப்பதாகவும், அதனை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். 

    மோதப்போகும் தனுஷ் மற்றும் செல்வராகவன்- வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....