Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஎன் கனவுகளில் மண்ண தூக்கி போட்டுடாங்க ! ஜாமீனுக்கு பின் டிடிஎப் வாசன் வெளியிட்ட பரபரப்பு...

    என் கனவுகளில் மண்ண தூக்கி போட்டுடாங்க ! ஜாமீனுக்கு பின் டிடிஎப் வாசன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

    தனது காணொலி பதிவின் மூலம் யூடியூபர்ஸ்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், டிடிஎப். 

    இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் யூடியூபர்களுள் ஒருவர்தான், டிடிஎஃப் வாசன். இரு சக்கர வாகனம் குறித்த காணொலியின் மூலம் மிகவும் பிரபலமானார். 

    டிடிஎப் வாசன் சில தினங்களுக்கு முன்பு டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சாகசம் செய்திருந்தார். அந்த காணொலியை டிடிஎப் வாசன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இந்த காணொலி சமூகவலைதளத்தில் வைரலானது. 

    இந்த காணொலியை கொண்டு கோவை காவல்துறை டிடிஎப் வாசன்மீது வழக்குப்பதிவு செய்தது. 

    இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:

    “டிடிஎப் வாசன் என்ற நபர் அவரது இரு சக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின்சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம், டி3 போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு, எம்டிஎஸ் பேக்கிரி அருகே அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக போத்தனுர் காவல்நிலையத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது”

    இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: இளம் வல்லுநர்களை உருவாக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் தொடக்கம்

    இதைத்தொடர்ந்து, போத்தனூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக டிடிஎஃப் வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிக்கு சரணடைந்தார். இதையடுத்து, அன்று மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் டிடிஎஃப் வாசன் அமரவைக்கப்பட்டிருந்தார். இதன்பின்னர், இரண்டு நபர்கள் உத்தரவாதம் அளித்த பின் அவர் அன்றே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

    இந்நிலையில், டிடிஎப் ஒரு காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த காணொலியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இந்த டிடிஎப் பவர் தெரியாமல் நீயூஸ் சேனல்கள் விளையாடிட்டு இருக்கீங்கனு கேட்க தோணுது..ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நினைச்சிட்டு இருக்கிறேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது. எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லையை கடந்து செல்கிறீர்கள்.. அதுக்கும் மேல போனா , எல்லா யூடியூபர்ஸும் சேர்ந்து நீங்கள் பண்ணும் வேலைகள் பற்றி பேச வேண்டி இருக்கும். எனவே, கட்டுப்பாடுடன் இருந்துகோங்க.. பேக் நியூஸ் எல்லாம் பரப்பாதீங்க.. இது மிரட்டல் எல்லாம் கிடையாது. 

    என்று தெரிவித்துள்ளார். 

    மேலும், யூடியூபர்ஸ்களுக்கு ஒரு வேண்டுகோள். பப்ஜி மதன், இர்பான் உள்ளிட்டவர்களை செஞ்சிட்டாங்க. அடுத்ததாக உங்களையும் செய்யலாம் என்றும், என் கனவுகளில் மண்ணைத்தூக்கி போட்டுட்டாங்க என்றும் கூறியுள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....