Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇளம் வல்லுநர்களை உருவாக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் தொடக்கம்

    இளம் வல்லுநர்களை உருவாக்கும் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டம் தொடக்கம்

    தமிழ்நாடு அரசு, இரண்டாண்டு கால முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

    முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படும் என்றும், மேலும் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகத்தில், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இத்திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. இத்திட்டத்திற்காக 5 கோடியே 66 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

    இதையும் படிங்க:விமான கட்டணத்தை மிஞ்சிவிட்டது ஆம்னி பேருந்து கட்டணம்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்…

    அதன்படி, முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் 30 இளம் வல்லுநர்களுக்கு அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியை பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்படும்.

    இந்நிலையில், இன்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இளம் வல்லுநர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

    முன்னதாக திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாக செயல்முறைகள் மற்றும் சேவை வழங்களின் செயல்திறனை மேம்படுத்துவதே முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் நோக்கம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....