Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய மாணவர்களின் படிப்புக்கு கரம் கொடுக்கிறதா ஹங்கேரி?

    இந்திய மாணவர்களின் படிப்புக்கு கரம் கொடுக்கிறதா ஹங்கேரி?

    உக்ரைன்- ரஷ்யா போர்த்  தீவிரம் அடைந்த நிலையில் இந்திய மாணவர்கள், அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டவரும் உக்ரைனை விட்டு வெளியேறி வருகின்றனர். இந்திய மாணவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தில் மூலம் போலந்து, ருமேனியா, ஹங்கேரியா போன்ற அண்டை நாடுகளின் எல்லைகள் வழியாக வந்து இந்திய விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். 

    என்ன தான் நாடு திரும்பிய மகிழ்ச்சி இருந்தாலும் மாணவர்களின் படிப்பு பாதியில் நின்றது அவர்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மாணவர்களின் பெற்றோர்கள் இந்திய நாட்டில் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

    ஹங்கேரிய எல்லை வழியாக சுமார் 6000 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக  வெளியேறி தாயகம் திரும்பி உள்ளனர். உக்ரைனில் இருந்து இந்திய நாட்டு மாணவர்களை மீட்டதில் ஹங்கேரிய நாட்டின் உதவி அதிகமானது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி ஹங்கேரிய நாட்டு அதிபர் விக்டர் ஆர்பனுடன் தொலைப்பேசி மூலம் பேசியுள்ளார். 

    இதில் உக்ரைன்-ரஷ்யா போர்நிறுத்தம் மற்றும் அமைதிக்காக இரு நாட்டவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இருவரும் கலந்துரையாடி victor orban இருக்கிறார்கள். இந்திய மாணவர்கள் விரும்பினால் ஹங்கேரிய நாட்டில் படிப்பைத் தொடரலாம் என்று விக்டர் ஆர்பன் தெரிவித்துள்ளார். மேலும் பாதுக்காப்பாக ஹங்கேரிய நாட்டின் எல்லை வழியாக இந்திய நாட்டிற்கு திரும்பிய 6000 மாணவர்களுக்கு விக்டர் ஆர்பன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். 

    பிரதமர் மோடி, இந்திய மாணவர்களைப் பாதுக்காப்பாக வழி அனுப்பி வைத்தமைக்கும் இந்திய மாணவர்களின் படிப்பைக் கருத்தில் கொண்டு ஆதரவாக அறிவிப்பை வெளியிட்டமைக்கும் விக்டர் ஆர்பனிடம் நன்றி தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....