Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்குப் பிணை : தாய் அற்புதம்மாள் உருக்கம் !

    30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்குப் பிணை : தாய் அற்புதம்மாள் உருக்கம் !

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளாய்  சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு முதல் முறையாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை கொலை செய்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறையில் இருப்பதை  சுட்டிக்காட்டிய எல்.நாகேஸ்வரராவ் ,பி.ஆர்.கவை  அடங்கிய நீதிபதிகள் குழு பேரறிவாளனின் தண்டனைக்காலத்தில் முதன் முறையாக ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

    இது குறித்து நீதிபதிகள் குழு “ மத்திய அரசு இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் ,32 ஆண்டு காலமாய் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்குகிறோம் ” என கூறியுள்ளது.

    நீதிமன்றத்தின்  இந்த உத்தரவுப்படி, விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்குக்  கட்டுப்பட்டு பேரறிவாளன் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் சென்னை ஜோலார்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்.

    இதற்கு  முன்னராக,மத்திய அரசின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் , ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சாந்தன் ,முருகன் மற்றும் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததும் அது கடந்த 2014-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாகக்  குறைக்கப்பட்டதைச்  சுட்டிக்காட்டி அப்பொழுதே அவர்கள் ஒரு சலுகையை அனுபவித்து விட்டார்கள் என வாதிட்டார். மேலும்,பேரறிவாளன் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளதால் தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே  உள்ளது எனவும் வாதிட்டார்.

    Perarivaalan

    தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி 302 வது பிரிவின் கீழ் வரும் குற்றங்கள் மாநில அரசு சார்ந்தவை என்றும்,அதன்படி  இது குறித்து பல முறை ஆளுநர் முடிவெடுத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டினார் .மேலும் ,மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற வழக்கில் கோட்சேவுக்கு தண்டனை குறைப்பு செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

    பேரறிவாளன் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயன் பேரறிவாளன் தண்டனைக்காலத்தில்  ஒழுக்கமாக  இருந்ததையும்,பரோலில் மூன்று முறை வந்தபொழுது எந்த குற்றத்திலும் ஈடுபடாததையும், சிறையில் கல்வித்தகுதியை மேம்படுத்தியதை சுட்டிக்காட்டியும் வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் ஆய்ந்தறிந்த நீதிபதிகள் குழு இறுதியாக பேரறிவாளனுக்கு 32 ஆண்டு தண்டனைக்காலத்தில் முதல் முறையாக ஜாமீன் வழங்கியது.

    Arputhammal

    இது, இத்தனை ஆண்டுகால சட்டப்போராட்டத்தில் பேரறிவாளனுக்கு  உறுதுணையாக இருந்த அவருடைய தாய் அற்புதம்மாளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். இது குறித்து பல முறை அவர் முறையிட்டிருந்தும் இப்பொழுதுதான் அவருக்கு வெற்றி கிடைத்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....