Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு!

    மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்; ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு!

    உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் ஏராளமான இளைஞர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

    உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம், தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் சார்பில் தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 54 தனியார் நிறுவனங்கள் மூலம் 2000 பணியிடங்களை நிரப்புவதற்க்காக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் துவக்கி வைத்தார்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் டெக் மகேந்திரா, சதர்லேண்ட் குளோபல், டெலிபர்பாஃமஸ், லூமினா டேட்டாமேட்டிக்ஸ், இன்டெக்ரா சாப்ட்வேர், யங்ஷின் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட், இந்தியா பிஸ்டன் லிமிடெட், DR ஆக்ஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், கேஞ்சஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், ஹைடிசைன் இந்தியா பிரைவேட் லிமிடெட், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், லக்ஷ் சோர்ஸ், ஆல்ட்ரூயிஸ்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ட்ரைவ், SBL ஐடி நிறுவனம், பேங்க்சோன், புக்கிங்மேக்கர் டாட் காம், ஹோட்டல் சர்குரு, வேல் பிஸ்கட்ஸ், ஸ்ரீ அபிராமி இன்ஜினியரிங், ஈஸி அவுட்டெஸ்க் பிரைவேட் லிமிடெட் மற்றும் பல்வேறு தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா, உற்பத்தி, நிறுவன மேலாண்மை, பிபிஓ போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் பல்வேறு பகுதிகளை சேந்த முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றன. இதில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவகுமார், தாகூர் அரசு கல்லூரி முதல்வர் சசிகந்ததாஸ், நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ், உழவர்கரை நகராட்சி உதவி திட்ட அதிகாரி சிவக்குமார் ஆகியோருடன் என்‌சி‌சி, என்‌எஸ்‌எஸ் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள், வேலைவைப்பு அதிகாரி வேலு ராஜ், உடற்கல்வி இயக்குனர் நாகராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

    ஊடகவியல் தொடர்பாக படிக்க விரும்புபவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....