Friday, March 24, 2023
மேலும்
    Homeவாழ்வியல்குழந்தைகளிருக்கும் அறையை இப்படி மாற்றுங்கள்! அவர்கள் துள்ளிக் குதிப்பார்கள்!

    குழந்தைகளிருக்கும் அறையை இப்படி மாற்றுங்கள்! அவர்கள் துள்ளிக் குதிப்பார்கள்!

    குழந்தைகள் பொதுவாக உற்சாகமாக இருக்க அவர்களின் மனநிலையை மாற்றும் வகையில் அவர்கள் இருக்கும் அறையை மாற்றினாலே போதுமானது தான். பள்ளியில் படித்து எழுதி களைத்து வரும் குழந்தையின் மனநிலையை இப்படியும் மாற்றலாம். வாருங்கள் பார்க்கலாம்…

    சுவரும் நிறமும் 

    குழந்தைகளின் கண்களுக்கு முதலில் விருந்தளியுங்கள். குழந்தைகளுக்கு பொதுவாக வண்ணங்கள் மிகவும் பிடிக்கும், குறிப்பாக கவர்ச்சியான வண்ணங்களையும் அல்லது அவர்களுக்கு பிடித்தமான வண்ணங்களையும் அடிப்பது நல்லது. மேலும் இதில் ஓவியங்கள் மூலம் ஒருவிதக் கதை அல்லது கருத்தை விவரித்தல் போன்றது இன்னும் கூடுதல் அழகையும் மனநிலையையும் மாற்றும். நான்கு புற சுவற்றில் ஒருபுற சுவற்றை பாதி வெள்ளை நிறத்தில் விட்டு வையுங்கள். சிறு குழந்தைகளாக இருந்தால் அதில் வரையவோ எழுதவோ செய்வார்கள். 

    அடுக்கு மெத்தை: 

    குழந்தைகளுக்கு சாதரணமான மெத்தையை விட அடுக்கு மெத்தை மாற்றத்தை ஏற்படுத்தும். ஏணி மீது ஏறி மெத்தையில் தூங்குவது, குதிப்பது எட்டுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வைக்கும். மேலும் மெத்தை உறை மற்றும் தலையணை உறையில் அவர்களுக்கு பிடித்தமான கார்ட்டூன் பொம்மைப் படங்கள் இருந்தால் இன்னும் அதிகமாய் மகிழ்ச்சி அடைவர். 

    பொம்மையும் அலமாரியும்: 

    அவர்களுக்கு நீங்கள் சிறு வயதில் இருந்து வாங்கித் தந்த பொம்மை வகைகளை அழகாக அலமாரியில் அடுக்கி வையுங்கள். மேலும் அவர்கள் அடிக்கடி எடுத்து விளையாடு பொம்மைகளை கீழே எட்டும் வியத்தில் வைத்துப் பாருங்கள். இது குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை தூண்டும். மூளையின் செயல்பாட்டை தூண்டும் விதமாக புதிர்கள் போடும் பொம்மை வகைகளை வாங்கி கொடுங்கள்.

    வெளிச்சமும் காற்றும்: 

    குழந்தைகளுக்கு நல்ல வெளிச்சமும் காற்றும் வரும் வகையில் சின்ன செடிகளை சன்னல் ஓரம் வைப்பது, கண்ணாடிப் போன்ற திரைகளை தொங்கவிடுவது போன்றவை குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் மாற்றும். 

    செல்லப் பிராணி: 

    குழந்தைகளுக்கு செல்லப் பிராணிகள் என்றாலே மிகவும் பிடிக்கும் அதுவும் அவர்கள் அறையில் விளையாடினால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். ஆகையால் அவர்களுக்கு பிடித்த பிராணிகளை அவர்கள் அறையில் இருக்குமாறு அமைத்தல் நல்லது. எடுத்துக்காட்டாக, மீன் வளர்த்தல், பூனை வளர்த்தல் போன்றவை. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    thoothukudi sathankulam

    சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

    தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது.  தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை...