Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ரஷ்யாவின் ருத்ர தாண்டவம்: பற்றி எறியும் நகரங்கள்!

    ரஷ்யாவின் ருத்ர தாண்டவம்: பற்றி எறியும் நகரங்கள்!

    ரஷ்யா- உக்ரைன் இடையேயான இந்தப் போர் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தீவிர தாக்குதலால் அங்கிருந்த பொதுமக்கள் லட்சக் கணக்கில் ருமேனியா,போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர். 

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேட்டோ அமைப்பில் சேர விருப்பம் இல்லை எனவும் அறிவித்தார். மக்கள் கைகளில் ஆயுதங்கள் கொடுத்து விருப்பம் இருந்தால் போராடலாம் என்றார். அதன் பேரில் உக்ரைன் பொதுமக்கள் பலர் இராணுவத்தில் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக போராடி வருகின்றனர். 

    மேலும் உலக அமைதிக்காக போரை நிறுத்த வேண்டும் என்று ஐ நா சபை வாக்கெடுப்பு நடத்தி தெரிவித்திருந்தது. இதில் இந்தியாவும் சீனாவும் பங்கேற்கவில்லை. புடினும் போரை நிறுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில் உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கி போரை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா மீது சர்வ தேச நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் 15 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்து, ரஷ்யா உடனடியாக இராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உத்திரவிட்டது. மேலும் இதை ரஷ்யா ஏற்க மறுத்தால் மேலும் தனித்துவிடப்படும் என்று தெரிவித்தனர்.  

    இந்நிலையில் ரஷ்யா, வான், தரை, கடல் என அனைத்து வழிகளிலும் உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வந்தது. மேலும் முக்கிய நகரமான கீவ் நகரில் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வந்த நிலையில் இப்போது அந்த நகரம் பற்றி எறியும் வீடியோ காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன. கீவ் நகரமே புகை மண்டலமாகவும் தீப் பற்றி எறியும் பிணமேடைகளாவும் காட்சியளிக்கின்றன. கீவ் நகரம் மட்டுமல்லாமல் உக்ரைனின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் தாக்குதலை தொடர்ந்து வருகின்றது ரஷ்யா.

    பெரிய பெரிய அடுக்கு மாடிக் கட்டிடங்கள், வீடுகள், தாங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள் என அனைத்து இடத்திலும் அணு ஆயுத ஏவுகணைகளை குறிவைத்து தாக்கி வருகிறது ரஷ்யா. 

    இது ஒருபுறம் இருக்க, ரஷ்யா சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்க மறுத்துள்ளது. இப்படியே தொடர்ந்தால் ஐ.நாவின் பாதுகாப்பு அமைப்பிடம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....