Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கு? துலாம் முதல் மீனம் வரை

    துலாம்: உங்கள் தேவை அறிந்து அமைதியாக செயல்படுங்கள். பணியிடத்தில் விளைவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் சிறப்புடன் வளர்ச்சி காண்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். உங்கள் குடும்ப நண்பர்களுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள். உங்கள் இனிமையான தொடர்பாடல் அவரை ஈர்க்கும். மகிழ்ச்சியான மனநிலை காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

    விருச்சகம்: ஆன்மிக விழிப்புணர்வும் ஈடுபாடும் மகிழ்ச்சி அளிக்கும். பணி வளர்ச்சி சராசரியைவிட சற்று கூடுதலாக இருக்கும். நிதி நிலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். அதன் வேகத்தில் நீங்கள் செல்ல வேண்டியிருக்கும். எனவே, திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் துணையுடன் நல்லுறவை தக்க வைத்துக் கொள்ள வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். இதனால், இருவரிடையேயான பிணைப்பு வலுப்பெறும். உரிய நேரத்தில் உணவை உட்கொள்ளவும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

    தனுசு: கேளிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். பணியில் நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்பின் மூலம் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். நிதிநிலையில் வளர்ச்சி காணப்படும். உங்கள் துணையுடனான அணுகுமுறை சிறப்பாக இருக்கும். உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மகரம்: மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் மகிழ்ச்சி உங்கள் செயல்களில் வெளிப்படும் தியானம் மேற்கொள்வதன் மூலம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்க இயலும்.உங்கள் தனித்த திறமை மூலம் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.நிதிநிலை சிறப்பாக இருக்கும்.உங்கள் துணையிடம் உங்கள் உணர்வுகளை உண்மையுடன் பகிர்ந்து கொள்வீர்கள். இதன் மூலம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கும்பம்: நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை அளிக்கும். சில விருப்பங்கள் விரைவில் நிறைவேறலாம். உங்கள் பணிகளை திறம்பட ஆற்றுவீர்கள். அது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும். பணம் அதிகமாக காணப்படும். அதனை நீங்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவீர்கள். உறவில் மகிழ்ச்சியும் நல்ல பிணைப்பும் காணப்படும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    மீனம்: இலக்குகளை அடைவதற்கு நீங்கள் மிகுந்த முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக முடிப்பீர்கள். பூர்வீக சொத்து வகையில் பண வரவு காணப்படும். கணிசமான தொகை சேமிப்பதற்கான சாத்தியம் உள்ளது. துணையிடம் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இதனால், உங்கள் துணையின் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....