Sunday, March 17, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்: கோவிலுக்கு செல்லுதல் மற்றும் பக்தி ஈடுபாடு உங்களுக்கு நன்மை அளிக்கும். தியானம் மேற்கொள்வது சிறந்தது. வேலை தொடர்பான பயணம் காணப்படும். கூடுதல் பணிகள் உங்களுக்கு சுமையாக தெரியும். உங்களை நிரூபிக்க நீங்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

    உறவில் பொறுமையைக் கடைபிடியுங்கள். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது சிறந்தது. பண வரவு தாராளமாக இருக்கும். சேமிப்பதற்கான வாய்ப்பும் அதிமாக இருக்கும். பூர்வீக சொத்து வகையில் பணவரவு காணப்படும். உங்களிடம் துடிப்பான மனநிலை காணப்படும். அது உறுதியான ஆரோக்கியத்திற்கு உதவும்.

    ரிஷபம்: உங்கள் செயல்களை பொறுமையுடன் கவனமாக கையாள வேண்டும். பிரார்த்தனை மற்றும் இறை மந்திரங்கள் மூலம் நன்மை விளைவதைக் காண்பீர்கள். பணியில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உங்கள் தனித்திறமை மூலம், உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். இதனால், தரமான பணிகளை வழங்குவீர்கள். அதிக சேமிப்பை பராமரிக்கும் வாய்ப்பு உள்ளது.

    பணியிடத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பு நிச்சயம் உள்ளது. உங்கள் துணையிடம் சகஜமாக நடந்து கொள்ள வேண்டும். இதனால், உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். மகிழ்ச்சி மற்றும் சகஜமான அணுகுமுறை காரணமாக நீங்கள் சிறந்த ஆரோக்கியத்தைப் பராமரிப்பீர்கள்.

    மிதுனம்: அமைதியான மன நிலை காணப்படும். உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்துகொள்ள முடியும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணியிடத்தில் பணிகள் சுமூகமாக நடைபெறும் உங்கள் தனித்திறமை மூலமாக உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல் வெளிப்படும்.

    பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பு காரணமாக கூடுதல் ஊக்கத்தொகை கிடைக்கும். உங்கள் துணை உங்களிடம் அன்பான, நட்பான அணுகுமுறை மேற்கொள்வார். இதனால், நல்ல புரிந்துணர்வை உங்களால் பராமரிக்க முடியும். உங்கள் மனதில் காணப்படும் நம்பிக்கை உணர்வு காரணமாக, நீங்கள் நல்ல உடல் நிலையைப் பராமரிப்பீர்கள்.

    கடகம்: உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியைப் பெற்றுத் தரும். நீங்கள் அதிக அறிவாற்றலைப் பெறுவீர்கள். உங்களிடம் தொழில் சார்ந்த அணுகுமுறை காணப்படும். இதனால், பணியில் திறம்பட செயலாற்றுவீர்கள். சரியான அணுகுமுறை மேற்கொள்வதன் மூலம், மகிழ்ச்சியும் வளர்ச்சியும் காணப்படும்.

    கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் நல்ல பலன்களை பெற்றுத் தரும். பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்களால் சிறிது பணம் சேமிக்க இயலும். திருமணத்தை திட்டமிடலாம். அதற்கான ஆயத்தங்கள் செய்து நீங்கள் மகிழலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    சிம்மம்: உங்கள் முயற்சிகள் வெற்றி பெரும். எதிர்பாராத நன்மைகள் கிடைப்பதற்கான சாத்தியம் உள்ளது. இது உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். பணி நிமித்தமான பயணம் காணப்படும். உங்கள் பணிகளை எளிதாக மேற்கொள்வீர்கள். உங்கள் துணையிடம் நேர்மையான அணுகுமுறை கொண்டிருப்பீர்கள். இதனால், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

    பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். சேமிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். சேமிக்கும் பணம் உங்களுக்கு எதிர்காலத்தில் பயன்படும். உங்களிடம் காணப்படும் ஆற்றல் மற்றும் உற்சாகம் காரணமாக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

    கன்னி: உங்களிடம் திருப்தியான மனநிலை காணப்படும். நீங்கள் பெரிதாக சாதித்ததாக உணர்வீர்கள். உங்கள் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். பணி செய்யும் முறை மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

    நிதி நிலைமை சுதந்திரமாக இருக்கும். உங்கள் துணையுடன் இருப்பதை சொர்கத்தில் இருப்பது போல உணர்வீர்கள். மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதில் நம்பிக்கை தரும் எண்ணங்களும் மகிழ்ச்சியும் காணப்படும். இதனால், உடல் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

    பெண்கள் இருக்கும் வரலட்சுமி விரதமும் அதன் பலன்களும்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....