Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? கன்னி முதல் மீனம் வரை!

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? கன்னி முதல் மீனம் வரை!

    துலாம்: 

    துலாம் ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களின் மன உறுதியை அதிகரிக்க கூடிய நாட்களாக உள்ளன. உங்களின் இலக்குகளை அடைய கடின முயற்சி தேவைப்படும். செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு பணவரவு இருக்கும். உங்கள் எண்ணத்தில் தெளிவு பிறக்கும். உங்கள் துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார். ஆன்மிக வழிபாடுகளில் அதிக நாட்டம் கொள்வீர்கள். வியாபாரத்தில் கவனமும் பொறுப்பும் அவசியம். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு தைரியம் மிகும் நாட்களாக உள்ளன. ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். போதுமான பணவரவு கிடைக்கும். இந்த வாரம் பெண்கள் மன நிம்மதி அடைவார்கள். நண்பர்கள் உங்களுக்கு உதவிகரம் நீட்டுவார்கள். உங்களுக்கு வரும் சவால்களை எதிர்க்கொண்டு  திறம்பட செயலாற்றுவீர்கள். 

    தனுசு: 

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு பிராத்தனை மூலம் வெற்றி காணும் நாட்களாக உள்ளன. வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அதன்மூலம் ஆதாயம் ஏற்படும். திருமண காரியங்கள் தற்போது வெற்றியடையும். அலுவலகத்தில் நல்ல சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவு பணவரவு கிடைக்கும். 

    மகரம்: 

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்களில் நீங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான செயல்களைச் செய்வீர்கள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படுவீர்கள். அனைத்து விதத்திலும் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். அலுவலகத்தில் வேலை சுமை அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிள்ளைகளின் மகிழ்ச்சியை கண்டு நீங்கள் மகிழ்வீர்கள். 

    கும்பம்: 

    கும்ப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு முன்னேற்றமான பலன்கள் கிடைக்கக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. பொறுமையோடு இருந்து காரியங்களைச் சாதிக்க நேரிடும். உங்களின் மன வலிமை கூடும். ஆன்மிக வழிபாடு மனதுக்கு அமைதி தரும். திருமண பேச்சு வார்த்தைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பிள்ளைகளால் சில பிரச்சனைகள் தோன்றி மறையும் வாய்ப்புண்டு. வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும்.

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு துணிச்சலுடன் செயல்படக் கூடிய நல்ல நாட்களாக இருக்கின்றன. புனிதப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். பழைய நண்பர்களின் சந்திப்பு உங்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....