Saturday, March 16, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    இந்த வார நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கு? மேஷம் முதல் கன்னி வரை

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களே, தேவைகளை அறிந்து நடக்கும் நல்ல நாட்களாக இந்த வார நாட்கள் உங்களுக்கு அமைக்கின்றன. உங்களின் விடா முயற்சிகள் மூலம் வெற்றி காண்பீர்கள். இதன்மூலம், உங்களின் இலக்குகளை எளிதில் அடைய முடியும். தெளிவான மனதுடன் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். மனதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்த்து தெளிவான மனதுடன் இருப்பது நன்மையைத் தரும். 

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே, மகிழ்ச்சியாக இருக்கும் நல்ல நாட்களாக அமைகின்றன. வியாபார ரீதியாக நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் பேசும் வார்த்தைகளில் மட்டும் தெளிவு தேவை. ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நல்லுறவு ஏற்படும். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம் நல்வழி பிறக்கும். யோகா அல்லது தியானத்தில் இருப்பதன் மூலம் நீங்கள் மன அமைதி பெறுவீர்கள். 

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, உங்களின் திறமைகளை நிரூபிக்க சரியான நாட்களாக உள்ளன. உங்களின் செயல்களில் பொறுமையும் நிதானமும் தேவை. கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அனுசரித்து நடப்பது நல்லது. அலுவகத்தில் சிறிய பிரச்சனைகள் தோன்றி மறையும். வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புனித பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு பரபரப்புடன் காணப்படும் நாட்களாக உள்ளன. உங்களின் விடா முயற்சியுடன் வெற்றியைக் காண போராடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சில பிரச்சனைகள் தோன்றி மறைய வாய்ப்பு உண்டு. குழந்தை பேறு உருவாக நல்ல வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நேர்மறையான எண்ணங்களை மனதில் வைத்து செயல்பட்டால் சுமூகமான வழிகள் பிறக்கும். 

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நல்ல முயற்சியுடன் செயலாற்றும் நாட்களாக உள்ளன. தொழிலில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவகத்தில் நீங்கள் செய்யும் வேலை காரணமாக பாராட்டுகள் குவியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புதிய வாகனம் வாங்க நல்ல நேரம். 

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சாதகமான நாட்களாக அமையும். உங்களின் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். பணிக்கு செல்லும் பெண்களுக்கு சாதகமான நிலைகள் ஏற்படும். அறிவிலும் ஆற்றலிலும் உயர்ந்து காணப்படுவீர்கள். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....