Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வு

    வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயர்வு

    சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் உயர்ந்து 1068.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

    இந்த மாதம் ஜூலை 1-ம் தேதி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலையில் ரூபாய் 198  குறைக்கப்பட்டது. ஆனால், அப்போது வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 

    இந்நிலையில், இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாய் உயர்ந்து, 1068 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

    அதேபோல், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுவின் விலை 8 ரூபாய் 50 காசுகள் குறைந்து, 2177 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. 

    கடந்த மே மாதம் 7-ம் தேதி 1015 ரூபாய் 50 காசுகளாகவும், மே மாதம் 19-ம் தேதி 1018 ரூபாய் 50 காசுகளாகவும் இருந்த வீட்டு உபயோக சமையல் எரிவாயுவின் விலை, இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....