Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகனமழையால் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கனமழையால் நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களில் இன்று பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

    இந்நிலையில், கனமழை காரணமாக நீலகிரியில் 4 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார். அதன்படி உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே, கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்திய மீனவர்கள் கைது- மத்திய அரசை விளாசும் வைகோ

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....