Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாடாக்டர் பட்டம் பெறுகிறார் இளையராஜா...நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி..!

    டாக்டர் பட்டம் பெறுகிறார் இளையராஜா…நாளை வழங்குகிறார் பிரதமர் மோடி..!

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்திகிராம பல்கலைக்கழகம் நாளை கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

    திண்டுக்கல் – மதுரை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளது, காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகம். இந்தப் பல்கலைக்கழகத்தின் பவளவிழா மற்றும் 36-வது பட்டமளிப்பு விழா வருகிற 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 

    இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளார்.

    இந்நிலையில், இந்த விழாவில் இந்திய இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டாக்டர் பட்டத்தை பிரதமர் மோடி வழங்கி கௌரவிக்கவுள்ளார். மேலும், இதே விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கவுள்ளார்.

    மேலும், இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதையும் படிங்கதனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை; அதிக கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து.!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....