Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமுதுநிலை மருத்துவ படிப்புக்கு இனி நீட் தேர்வு கிடையாது..! அப்போ வேறென்ன தெரியுமா ?

    முதுநிலை மருத்துவ படிப்புக்கு இனி நீட் தேர்வு கிடையாது..! அப்போ வேறென்ன தெரியுமா ?

    முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இளநிலை மருத்துவ படிப்புகளைப் போன்று முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் ஆண்டு தோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 

    இந்நிலையில், இந்த தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதவாது எம்.பி.பி.எஸ் இறுதியாண்டு மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். 

    மாணவர்கள் மருத்துவ பணிகள் செய்வதற்கான லைசென்ஸ் பெறுதல், தகுதி அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு செல்லுதல், வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் வந்து தகுதி பெறுவதற்கான பொது தேர்வாக இந்தத் தேர்வு முறை நடத்தப்படும்.

    தேசிய மருத்துவ வாரியத்தின் சட்டப்படி இறுதியாண்டு மாணவர்கள் இந்த தேர்வினை எழுத வேண்டியது கட்டாயம். இந்தச் சட்டம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது . இந்நிலையில் இந்தத் தேர்வினை  நடத்துவதற்கு 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை கால அவகாசம் பெறப்பட்டுள்ளது. 

    இதன்படி அடுத்த ஆண்டு நீட் தேர்வு நடத்தப்பட்டால், தற்போது உள்ள நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரலாம். 

    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் நெக்ஸ்ட் தேர்வை 2019-2020 ஆண்டு பிரிவு மருத்துவ மாண்வர்கள் எழுத வேண்டும். இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களை வைத்து 2024-2025 ஆம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறும். 

    மேலும் இந்த தேர்வினை தேசிய மருத்துவ கல்வி வாரியத்துக்கு பதிலாக எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    இதையும் படிங்க10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும்- அமைச்சர் ரகுபதி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....