Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஹோலி பண்டிகை; வண்ணமயமான ஒய்.எம்.சி.ஏ

    ஹோலி பண்டிகை; வண்ணமயமான ஒய்.எம்.சி.ஏ

    சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். 

    வட மாநிலத்தில் மிக விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாக இருப்பது ஹோலி பண்டிகை. இந்நிலையில், இன்று கொண்டாடப்பட்டு வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பல தரப்பினரும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    அந்தவகையில் தில்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஜார்கண்ட்,பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சென்னையில் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதமாக நேற்று இரவு பழையன கழிதல் என்ற நோக்கில் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து இன்று காலை ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

    குறிப்பாக சவுகார்பேட்டை, வேப்பேரி, தியாகராயநகர், பட்டாளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வசித்து வரும் வடமாநில மக்கள் வண்ண பொடி பூசி அன்பை பரிமாறிக்கொண்டனர். 

    இந்நிலையில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி வண்ணப் பொடிகளை தூவி நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

    சாலையில் உலா வந்த கரடி; பீதியில் மக்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....