Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாசிமகம்; திருவிழா கோலம் புகுண்ட மாமல்லபுரம் கடற்கரை

    மாசிமகம்; திருவிழா கோலம் புகுண்ட மாமல்லபுரம் கடற்கரை

    மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் இருளர் இன மக்கள் குடில்கள் அமைத்து தங்கி, தங்கள் குல தெய்வமான கன்னியம்மனை வழிபாடு செய்து வருகின்றனர். 

    மாசிமகத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இருளர் இன மக்கள் பெரும்பாலானோர் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு தெற்குபக்க கடற்கரையில் ஒன்றுகூடி கன்னியம்மனை வழிபாடு செய்வது வழக்கம். பிறகு கன்னியம்மனை வழிபட்டு தங்களது உறவு முறைக்குள் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த சடங்குகளையும் நடத்துவர்.  

    பல மாவட்டங்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் மாசி மகத்துக்கு ஒருநாள் முன்னதாகவே மாமல்லபுரம் கடற்கரையில் ஒன்று கூடி குடில்கள் அமைத்து தங்குகின்றனர். மணலில் 7 படி அமைத்து தேங்காய், பூ, பழம் உள்ளிட்டவற்றை வைத்து வழிபாடு செய்கின்றனர். மேலும் அந்த இடத்திலேயே சமைத்து சாப்பிடுவது கலைநிகழ்ச்சிகள் நடத்துவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். 

    அந்த வகையில் கடந்த ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட 15 ஜோடிகள் நேற்று எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். 

    இந்த ஆண்டு மாமல்லபுரம் தெற்கு பக்க கடற்கரையில் சுமார் 20 ஆயிரம் இருளர் இன மக்கள் ஒன்று கூடி வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. 

    நெல்சன் திலீப்குமாருக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஜாக்கி ஷெராஃப்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....