Friday, March 31, 2023
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமுறையாக செயல்படாத அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது?

    முறையாக செயல்படாத அரசு அதிகாரிகளின் சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது?

    இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்கள் கட்டிய பிறகு, நோட்டீஸ் அனுப்பும் அரசு அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என்று உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

    செல்வாக்குமிக்க பிரமுகர்கள் பலர், இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்து வருவதை, வாடிக்கையாக வைத்து வருகின்றனர். மாநகரங்களிலும், நகரங்களிலும், கிராமங்களிலும் கூட கோவில் நில ஆக்கிரமிப்பு என்பது சர்வ சாதாரணமாக  நடந்து வருகிறது. 

    ஆக்கிரமிப்பு செய்து, அந்த நிலத்தை தனது நிலம் போல் போலி பட்டா வாங்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இது ஒரு புறம் அரங்கேறி வரும் நிலையில், கட்டடங்கள் கட்டிய பிறகு தான், அரசு அதிகாரிகள் நோட்டிஸ் அனுப்புகின்றனர். இந்த செயல்கள் தான் இப்போது அதிகளவில் நடந்து வருகிறது. 

    தஞ்சாவூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டு தர வேண்டும் என்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தது. இதனை, ஆர். மகாதேவன் மற்றும் பி.டி ஆதிகேசவலு என இரு நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்தது. கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, பெரிய கட்டடங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இதனை, அறிந்து மூன்றாம் நபர் வழக்கு தொடுத்த பிறகு தான், அறநிலையத் துறைக்கு தெரியவந்துள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தனர். 

    கோவில் நிலத்தில், கட்டடங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்பு எந்த வகையில் அனுமதி அளித்தது என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விதிமீறல்களில் தொடர்புடைய அனைவரின் பெயர்களும் பட்டியலிடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். உயர்நீதி மன்றம் தெரிவித்த உத்தரவில், அறநிலையத் துறை ஆய்வாளர்கள் முறையாக செயல்படாததால் தான் இது போன்ற குற்றங்கள் நிகழ்கிறது என்றும், முறையாக கவனித்து அதை அறநிலையத் துறை ஆணையரின் கவனத்திற்கு அவ்வப்போதே கொண்டுச் சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். முறையாக செயல்படாத இந்த அரசு அதிகாரிகளின் ஓராண்டு சம்பளத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என்றும் கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர். மேலும் இவ்வாறு, குற்றங்களில் ஈடுபடும் அரசு அதிகாரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படியுங்கள், மகளை நரபலி கொடுக்கத் துணிந்த தந்தை; அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    news

    60 சவரனா? 200 சவரனா? – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில் புதிய...

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 200 சவரன் வரை நகைகள் திருடு போனதாக புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டில் 60 சவரன் தங்க நகைகள்...