Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு - நிலவரம் உள்ளே!

    கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா பாதிப்பு – நிலவரம் உள்ளே!

    இந்தியாவில், கொரோனா தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்த எண்ணிக்கையில் பதிவாகி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்றின் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு, நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்தையும் தாண்டிச் செல்கிறது.

    • நேற்று முன்தினம்  2,483 பேருக்கு உறுதியானதை அடுத்து, நேற்று 2,927 பேருக்கு தொற்று உறுதியானது. 
    • இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 3,303 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இதுவரை பெருந்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியே 30 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி உள்ளது. 
    • மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் 39 பேர் ஆவர். இதுவரையில் இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  
    • கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 2563 ஆக பதிவாகியுள்ளது. இதனால், இதுவரை தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 25 லட்சத்து 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 
    • இப்போது 16,980 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதுவரை இந்தியாவில், 188.40 லட்சம் பேருக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். 

    இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் விழிப்புணர்வுடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ ஆய்வாளர்கள், முன்பே கொரோனா நான்காம் அலையானது ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வர வாய்ப்பிருப்பதாக தெரிவித்த நிலையில், தற்போது தொற்றின் வேகம் அதிகரித்து வருவது கவனிக்கதக்கது.

    மேலும், தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களில் முகக்கவசம் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு சென்றால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க; லாரியில் தொற்றிக் கொண்ட சுங்கச் சாவடி ஊழியர்; இணையத்தில் வைரலான சம்பவம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....