Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடர் தோல்வியில் இருந்து தப்பிக்குமா கொல்கத்தா அணி? - இன்றைய ஐபிஎல் பார்வை!

    தொடர் தோல்வியில் இருந்து தப்பிக்குமா கொல்கத்தா அணி? – இன்றைய ஐபிஎல் பார்வை!

    முதல் நான்கு போட்டிகளில் மூன்று போட்டிகளில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது அதன்பிறகு, தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தொடர் தோல்வியானது டெல்லி அணியிடம் பெற்ற தோல்வியில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணியானது எட்டாவது இடத்தில் உள்ளது. 

    வீரர்களை பொறுத்தமட்டில், வலுவாக இருப்பதாக தோன்றினாலும், செயல் என்று வரும்போது வலுவான வீரர்கள் தற்சமயத்தில் சொதப்பி வருகின்றனர். கொல்கத்தா அணியானது கடந்த நான்கு ஆட்டங்களில் நான்கு வெவ்வேறு தொடக்க ஜோடிகளைக் கொண்டிருந்தனர். வெங்கடேஷ் ஐயர் தொடர்ந்து தனது திறமையை வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ரஸல்தான் கொல்கத்தா அணியின் பலமாக இருக்கிறார். 

    ஆனால், வெறுமனே ரஸலின் போராட்டத்தால் கொல்கத்தா அணியின் வெற்றிப்பெற முடியாது என்பதை மற்ற வீரர்கள் உணர்ந்து இன்றையப் போட்டியில் செயல்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    டெல்லி அணியை பொறுத்தவரையில், வெற்றி, தோல்விகளை மாறி மாறி பெற்றுக்கொண்டிருக்கின்றன. ஆம்! கொரோனா, டெல்லி அணிக்கு பிறகு தலை நிமிர்ந்ததாக கருதப்பட்டது ஆனால் கடந்த போட்டயில் மீண்டும் தோல்வியைத் தழுவியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் வான்கடே மைதானத்தில் தோல்வியடைந்தது.

    இரு அணிகளுக்கும் இடையேயான இன்றையப் போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. வான்கடே மைதானத்தை பொறுத்தமட்டில் முதல் நான்கு போட்டிகளில் பந்துவீச்சைத் தேர்வு செய்த அணிகளும், அடுத்த ஐந்து போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும் வெற்றிப்பெற்றுள்ளன. ஆகையால், முடிந்தவரை இன்று டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்க் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    மேலும், இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் கொல்கத்தா அணியானது 16  முறையும், டெல்லி அணியானது 13 முறையும் வெற்றிப் பெற்றுள்ளது. 

    ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதவிருக்கும் போட்டியானது இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க இருக்கிறது. 

    பரபரவென இருந்த இறுதி ஓவர்; இதுதான் ‘த்ரில்லங்’ என ரசிகர்களை உணரவைத்த நிகழ்வு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....