Monday, March 18, 2024
மேலும்
    Homeவாழ்வியல்விவசாயம்விவசாயிகளே எந்தப் பட்டத்தில் எந்தப் பயிரை விதைக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்!

    விவசாயிகளே எந்தப் பட்டத்தில் எந்தப் பயிரை விதைக்கலாம்: தெரிந்து கொள்ளுங்கள்!

    “ஆடிப்பட்டம் தேடி விதை” என்ற பழமொழியை அனைவரும் அறிவர். அதாவது, ஆடி மாதத்தில் விதைக்கும் விதைகள் நன்றாக வளர்ச்சி அடையும். இதனால், மகசூல் அதிகளவில் கிடைக்கும். இதே மாதிரி, பட்டத்திற்கு ஏற்ற பயிர்களை விதைத்தால், நிச்சயம் மகசூல் அதிகரிக்கும்.

    உகந்த தட்ப வெப்ப சூழ்நிலை மற்றும் காற்றோட்டம் இருக்கும் போது பயிர்கள் அதிக அளவில் மகசூலைத் தரும். அதுவே அந்தப் பயிருக்கு ஏற்ற பட்டம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். நெற்பயிருக்கு மிகவும் ஏற்றது சம்பா பட்டம். இது போல் ஒவ்வொரு பயிருக்கும் ஒவ்வொரு பருவம் ஏற்றதாக அமையும். பருவத்திற்கு ஏற்ப விதைப்பதே சாலச் சிறந்தது.

    சித்திரை முதல் ஆடி மாதம் வரை சொர்ணவாரிப் பட்டம், ஆடி முதல் மார்கழி மாதம் வரை சம்பா பட்டம், புரட்டாசி முதல் தை மாதம் வரை பின்சம்பா பட்டம் அதாவது தாளடிப் பட்டம் எனவும், மார்கழி முதல் மாசி மாதம் வரை நவரைப் பட்டம், நடு வைகாசி முதல் நடு ஆவணி மாதம் வரை குறுவைப் பட்டம், நடு சித்திரை முதல் நடு ஆனி மாதம் வரை கார்ப் பட்டம், புரட்டாசி முதல் கார்த்திகை மாதம் வரை பின் தாளடிப் பட்டம் என நம் முன்னோர்கள் தமிழ் மாதங்களை பட்டத்துடன் தொடர்புபடுத்தி உள்ளனர்.

    நிலத்தினுடைய வளம்…

    ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் மகசூல் எடுத்த பிறகு, மீண்டும் அதே பயிரை சாகுபடி செய்தால் நிலத்தினுடைய வளம் மற்றும் மகசூல் குறைய வாய்ப்புள்ளது. ஒரு பயிர் சாகுபடி செய்த பின் அடுத்ததாக, மாற்றுப் பயிர்களை விளைவித்தால், முந்தையப் பயிர்களின் கழிவுகள் எருவாகப் பயன்படும். அதோடு, முந்தையப் பயிர்களின் நோய்களும் எளிதில் தாக்காது.

    மார்கழி முதல் மாசி மாதம் வரை கத்தரி, பாகற்காய், கொத்தவரை, சுரைக்காய், மிளகாய், தக்காளி, பீர்க்கு, கோவைக்காய் மற்றும் கீரை வகைகளைப் பயிரிடலாம். மார்கழி மற்றும் தை மாதத்தில் கத்தரி, மிளகாய், தக்காளி, முள்ளங்கி, கீரைவகைகள், வெங்காயம், பாகற்காய், பூசணி, சுரைக்காய், அவரை, கொத்தவரை மற்றும் கரும்புப் பயிர்களை பயிரிடலாம்.

    தை, மாசி மற்றும் பங்குனி மாதங்களில் கத்தரி, மிளகாய், கொத்தவரை, பீர்க்கு, கோவைக்காய், கீரைவகைகள், அவரை, தக்காளி, பாகற்காய், வெண்டை, சுரைக்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, சோளம், கரும்பு மற்றும் பருத்திப் பயிரை பயிரிடலாம்.

    சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் செடிமுருங்கை, கத்தரி, எள், சோளம். வைகாசி, ஆனியில் பூசணி, வெண்டை, தென்னை தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரைப் பயிர்களைப் பயிரிடலாம். ஆனி, ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் மிளகாய், பூசணி, தென்னை, தட்டைப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறு முள்ளங்கி, புடலை, எள், உளுந்துப் பயிர்களைப் பயிரிடலாம்.

    ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் செடிமுருங்கை, மிளகாய், நெல், பருத்திப் பயிர்களைப் பயிரிடலாம். புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் வெங்காயம், கொண்டைக்கடலை, நெல், பருத்திப் பயிர்களைப் பயிரிடலாம். ஐப்பசி, கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் நெல், சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளிப் பயிர்களை பயிரிடலாம்.

    பயிரிடப்படும் விதைகள் தரமானதாக இருந்தால் அதிகளவில் மகசூல் கிடைக்கும். விதையின் தரத்தினை பரிசோதனை செய்ய, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு விதைப் பரிசோதனை நிலையங்களில் விதைகளைக் கொடுத்து அதன் தரத்தை பரிசோதித்த பின் விதைப்பது நல்லது.

    கருஞ்சீரகம் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....