Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

    கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

    மூன்று நாள்கள் தொடர் விடுமுறையின் காரணமாக, பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல படையெடுத்ததால், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வருகிற திங்கள்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், வார இறுதி நாள்கள் அடுத்தடுத்து வருவதால், மூன்று நாள்கள் தொடர் விடுமுறை வருகிறது. 

    இதன் காரணமாக, நேற்று மாலை முதலே பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஒரே நேரத்தில் குவிந்ததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அதேபோல்,அதிகாலையில் பெருங்களத்தூர், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

    ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறையை பயன்படுத்தி, மக்களிடம் அதிக கட்டணத்தை வசூலிக்க கூடாது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே, பல்வேறு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தனியார் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து; எரிந்து நாசமான வாகனங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....