Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து; எரிந்து நாசமான வாகனங்கள்!

    தனியார் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து; எரிந்து நாசமான வாகனங்கள்!

    தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் உள்ள தனியார் வாகன நிறுத்தத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 15 வாகனங்கள் எரிந்துள்ளது. 

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ள மேற்கு தண்ணீர் தொட்டித் தெருவில், கோயில் வளாகத்தில் தனியார் வாகன நிறுத்தகம் உள்ளது, இங்கு சுமார் 50 வாகனங்கள் வரை நிறுத்தப்படும்.

    கம்பம் பகுதிக்கு அருகே கேரளம் மாநிலம் உள்ளது. அங்கு ஏலக்காய் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆண், பெண் கூலித் தொழிலாளர்களை ஜீப், டாடா சுமோ, பொலிரோ போன்ற வாகனங்கள் மூலம் காலையில் வேலை செய்யும் எஸ்டேட்டில் இறக்கி விட்டு, மாலையில் கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விட்ட பின்னர் வாகனங்களை இங்கு நிறுத்துவது வழக்கம். 

    இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வாகன நிறுத்தத்தில் கரும்புகை எழும்பியது. சற்று நேரத்தில் வாகன நிறுத்தத்தில் தீ, மள மளவென எரிந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் இதுகுறித்து கம்பம் தெற்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

    கம்பம் மற்றும் உத்தமபாளையத்தைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், 15 வாகனங்கள் தீயில் கருகி பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது, அருகே நிறுத்தப்பட்டிருந்த 10 வாகனங்கள் சேதமடைந்திருந்தது.

    கம்பம் தெற்கு காவல் நிலைய காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து மின்சார கசிவா அல்லது முன் விரோதம் காரணமாக யாராவது செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தும் வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....