Tuesday, March 19, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புகுரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? கடைசி நாள் என்று தெரியுமா?

    குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? கடைசி நாள் என்று தெரியுமா?

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( tnpsc ) குரூப் 2 மற்றும் குரூப் 2 எ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். கடந்த மாதம் வெளியான அறிவிப்பில் மே மாதம் தேர்வுகள் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. மேலும் மே 21 ஆம் தேதி 5529 காலிப் பணியிடங்களுக்கான குரூப்2 மற்றும் குரூப் 2 எ தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்த இந்த காலிப் பணியிடங்கள் அனைத்து தரப்பு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். முதல் தகுதியாக ஏதேனும் ஒரு துறையில் அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருத்தல் கட்டாயம். ஆனால் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதிகள் தேவைப்படும். எடுத்துக்காட்டாக தனிப்பட்ட எழுத்தர் பணிக்கு  தட்டச்சு படிப்பு அவசியம். இது மட்டும் அல்லாமல் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    நேர்முகத் தேர்வுகளுக்கு 116 இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கு 5413 காலிப் பணியிடங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் நகராட்சி ஆணையர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர், வருவாய் உதவியாளர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன. நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கு நேர்முக எழுத்தர், உதவியாளர் போன்ற பதவிகள் நிரப்பட உள்ளன. 

    இந்தக் குரூப் 2 தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வு என இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது. குரூப் 2 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 200 வினாக்கள் கேட்கப்படும், முதல் 100 வினாக்கள் மொழிப் பாடத்திலும் 75 வினாக்கள் பொது அறிவிலும் மீதி 25 வினாக்கள் திறனாய்விலும் இருக்கும். 90 மதிப்பெண்கள் பெற்றவர்கள் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த தேர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். முன்பு காலை தேர்வுகள் 10 முதல் 1 வரை நடைபெற்றது. மாலை நேரத் தேர்வுகள் வழக்கம் போல் மதியம்  2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கான அல்லது தேர்வு சம்மந்தப்பட்ட கேள்விகள் குழப்பங்களைத் தீர்க்க அதிகாரப்பூர்வமான www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அல்லது கட்டமில்லா தொலைபேசி எண்ணான 18004190958 தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களைப் பெறலாம்.

    இன்று கடைசி நாள் என்பதால் வாய்ப்பை நழுவ விடாமல் குரூப் 2 மற்றும் குரூப்2 எ தேர்வுகளுக்கு உடனே சென்று விண்ணப்பியுங்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....