Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஒரு நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் தற்போது டாக்சி டிரைவர்; நடந்தது என்ன? மக்கள் உருக்கம்!

    ஒரு நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் தற்போது டாக்சி டிரைவர்; நடந்தது என்ன? மக்கள் உருக்கம்!

    ஆப்கானிஸ்தானில் தற்போது தாலிபான்களின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. இருபது வருடங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தாலிபான்களை அப்போது அமெரிக்க அரசு, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றியது. அன்றிலிருந்து ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்கள் கைக்குள் கொண்டுவர எண்ணிய தாலிபான்கள் கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். 

    அமெரிக்கா தாலிபான்களை ஆப்கானிஸ்தானை விட்டு விரட்டியடிக்கும் முன்பு ஐந்து ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் நிலவியது கொடுமையான ஆட்சியாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மீப்பெறும் கேள்விக்குறியானது. உலக நாடுகள் அனைத்தும் கவலைப்படும்படியான நிகழ்வுகள் அவ்வப்போது ஆப்கானிஸ்தானில் அரங்கேறி வரும். தாலிபான்கள் ஆட்சி செய்த அந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகம் இருந்த நாடாகவே உலகளவில் ஆப்கானிஸ்தான் கருதப்பட்டது. 

    கடந்த வருடம் தாலிபான்கள் படையெடுத்தபோது ஆப்கானிஸ்தானின் இராணுவமும், அரசும் எளிதில் சரணடைந்து விட்டன. ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான்’  என பெயரும் இட்டனர், தாலிபான்கள்.  ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகள் பலரும் பல்வேறு  நாடுகளுக்குத் தப்பிச்சென்றனர். ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கனி பதவி விலகி தாஜிகிஸ்தான் நாட்டுக்குச் சென்றுவிட்டார். இவ்வாறாக பலரும் பல இடங்களுக்குத் தப்பிச்செல்ல ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் தலைமையின் கீழ் முழுமையாக வந்தது.  

    ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி அஷ்ரப் கனி அவர்களின் அமைச்சரவைப் பேரவையில் இடம்பெற்ற நிதியமைச்சர்தான் காலித் பயிண்டா. தாலிபான்கள் நாட்டைக் கைப்பற்றும் போது வெளிநாடுகள் தப்பிச்சென்றவர்களில் காலித் பயிண்டாவும் ஒருவர். இவர் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றார். 

    அமெரிக்காவில் தஞ்சம் அடைந்த இவர் தற்போது செய்து வரும் வேலை பலரையும் உருகவைத்துள்ளது. ஆம்! ஆப்கானிஸ்தானின் நிதியமைச்சராக பொறுப்பாற்றிய காலித் பயிண்டா அவர்கள் தற்போது டாக்ஸி டிரைவராக அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். தினசரி செலவுகளுக்காக அவர் டாக்ஸி டிரைவர் பணியை மேற்கொண்டு வருகிறார். 

    சமீபத்தில் காலித் பயிண்டா அவர்கள் அளித்துள்ள பேட்டியில், எனது குடும்பத்தினரை நான் அமெரிக்கா வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து விட்டேன் என்றும் நாங்கள் பார்த்துப் பார்த்து உருவாக்கிய ஆப்கானிஸ்தான் சீட்டுக்கட்டு சரிந்ததைப் போன்று தலிபான்களிடம் வீழ்ந்து விட்டது என்றும் 6 மணி நேரம் கார் ஓட்டி 150 டாலர்கள் சம்பாதித்து தற்போது அமெரிக்காவில் நானும் எனது குடும்பத்தினரும் ஒன்றாக இருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ‘வாழ்வு எப்போது எப்படி வேண்டுமானாலும் மாறலாம்’ என்று இச்செய்தியை பகிர்ந்த படியே பலர், இணையத்தில் பதிவுச் செய்து வருகின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....