Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇவ்வளவு சீக்கிரத்தில் டாப் 10 ஆ? உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்த இந்திய பேட்மிண்டன் வீரர்!

    இவ்வளவு சீக்கிரத்தில் டாப் 10 ஆ? உலகையே ஆச்சரியத்தில் மூழ்கடித்த இந்திய பேட்மிண்டன் வீரர்!

    ஆல் இங்கிலாந்து ஓபனில் வெள்ளிப்பதக்கம் வென்றதன் மூலமாக, உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் நுழைந்தார் இந்தியாவின் லக்சயா சென். 

    உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லக்சயா சென் என்ற இந்த இளம் சாதனையாளருக்கு வயது 20 தான் ஆகிறது. ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் இறுதிப்போட்டியை எட்டிய 5 ஆவது வீரர் என்ற சாதனையை சாதித்தன் மூலமாக உலக தரவரிசைப் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 9வது இடத்தைப் பிடித்தார். இந்த இடத்தை 74,786 புள்ளிகளுடன் , உலக சாம்பியனான லோ கீன் யூவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இங்கிலாந்து ஓபனில், ஒலிம்பிக் சாம்பியனும் உலகின் நம்பர் வீரருமான விக்டர் ஆக்செல்சனிடம் நேர் செட்களில் தோல்வியைத் தழுவி மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். லக்சயா சென் உலக ஜூனியர் பேட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தில் இதற்கு முன்பே எட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் 12வது இடத்தில் இருக்கும் இவரை, இந்த இளம் வயது வீரர் முந்தி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

    இந்நிலையில் இந்தத் தோல்வியினால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த லக்சயா சென், சிறிது காலம் ஓய்வு வேண்டி நடந்து கொண்டிருக்கும் சுவிஸ் ஓபனில் இருந்து விலகியுள்ளார். ஆல் இங்கிலாந்து தொடரில் முதல் அரையிறுதி வரை முன்னேறிய இந்தியாவின் மகளிர் இரட்டையர் ஜோடியான ரீட்சா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி 12 இடங்கள் முன்னேறி 34வது இடத்தைப் பிடித்துள்ளது. பர்மிங்காமில் நடந்த ரிசர்வ் பட்டியலின் மூலமாக முன்னேறிய இந்த இணை காலிறுதியில் இரண்டாம் நிலை வீரர்களான கொரியாவைச் சேர்ந்த லீ சோகி மற்றும் ஷின் சியுஞ்சன் இணையை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாகியது. காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற இணையான அஸ்வினி பொன்னப்பா மற்றும் சிக்கி என்.ரெட்டி இணை ஒரு இடம் பின்தங்கி 20வது இடத்தைப் பிடித்து இந்தியாவின் சிறந்த மகளிர் இரட்டையர் இணையாகத் திகழ்கிறது. 

    இரட்டை ஒலிம்பிக் சாம்பியனும் முன்னாள் உலக சாம்பியனுமான பி.வி.சிந்து 7வது இடத்தில் நீடிக்கிறார். இதன் மூலம் இந்தியாவின் சிறந்த மகளிர் ஒற்றையர் வீராங்கனை என நிரூபித்துள்ளார். மற்றொரு மகளிர் ஒற்றையர் வீராங்கனையான சாய்னா நேவால் இங்கிலாந்து ஓபனில் இரண்டாவது சுற்றில் தோல்வியைச் சந்தித்து இருந்தாலும் இரண்டு இடங்கள் முன்னேறி 23வது இடத்தில் நீடிக்கிறார். காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இணையான சாத்விக்சாய் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை இந்திய  ஓபனில் பட்டம் வென்றதன் மூலமாக ஆடவர் இரட்டையர் பிரிவில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

    சுவிஸ் ஓபன் தொடங்கியுள்ள நிலையில் இந்த தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை இந்திய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....