Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசுப் பள்ளிகளில் இனி திரைப்படங்கள் - வெளிவந்த சுற்றறிக்கை!

    அரசுப் பள்ளிகளில் இனி திரைப்படங்கள் – வெளிவந்த சுற்றறிக்கை!

    அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் வெளியிடுவது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், திரைப்படங்களின் சிந்தனை, செயல்திறன், மாணவர்களின் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வொரு மாதமும் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்த வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய படங்கள் குறித்த பரிந்துரையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பும். திரைப்படத்துக்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே சிறார் படங்களை திரையிட வேண்டும்.

    அதோடு, திரைப்படங்களைத் திரையிடும் முன்பும், பின்னரும் அதுகுறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். திரைப்படம் முடிந்தபின்பு அதுகுறித்த விமர்சனத்தை மாணவ, மாணவிகள் எழுதித் தர வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான திட்டம் ரெடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....