Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடி

    ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.44 லட்சம் கோடி

    கடந்த ஜூன் மாதம் மட்டும் ஜிஎஸ்டியின் மூலம் இந்திய அரசுக்கு 1,44,616 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. ஐந்து வருட ஜிஎஸ்டி வரலாற்றில் இது இரண்டாவது அதிகபட்ச மாத வருவாய் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மட்டுமே 11,018 கோடி கிடைத்துள்ளது. இறக்குமதிக்கு கிடைத்த 1,197 கோடியும் இதில் அடங்கும். ஐந்து வருடத்தில் இறக்குமதிக்காக கிடைத்த வருவாயில் இதுவே அதிகமாகும்.

    கடந்த மார்ச் மாதத்திலிருந்து பார்க்கையில், தொடர்ச்சியாக நான்கு மாதம் ஜிஎஸ்டி வருவாயானது 1.40 லட்சம் கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஐந்து மாதங்களில் 1.40 லட்சம் கோடிகளுக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது.

    2022-23ம் நிதியாண்டில் முதல் கால் பகுதியில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு 1.51 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த வருட நிதியாண்டில் இதே காலத்தில் சராசரி ஜிஎஸ்டி வருவாய் 1.10 லட்சம் கோடியாக இருந்தது. ஒரு வருடத்தில் மட்டும் 37 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    50 சதவீதத்திற்கும் மேல் வளர்ச்சியடைந்த மாநிலங்கள்:

    இந்தியாவின் சில மாநிலங்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வருவாயினை கொடுத்துள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் 83 சதவீதமாக ஜிஎஸ்டி வருவாய் உயர்ந்துள்ளது. உத்தர்காண்டில் 82 சதவீதமும், ஹரியானாவில் 77 சதவீதமும், கர்நாடகாவில் 73 சதவீதமும், மஹாராஷ்டிராவில் 63 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 58 சதவீதமும், ராஜஸ்தானில் 56 சதவீதமும், பஞ்சாபில் 51 சதவீதமும், குஜராத்தில் 50 சதவீதமும் ஜிஎஸ்டி வருவாயானது அதிகரித்துள்ளது.

    நாற்பது சதவீதத்துக்கும் மேல் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்த மாநிலங்களின் எண்ணிக்கை இந்த முறை உயர்ந்துள்ளது. 

    ‘இந்த நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வருவாய் 17 சதவீதம் அதிகரித்தால், பல மாநிலங்கள் தங்களது ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையினை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. எனினும், ஒரு சில மாநிலங்களுக்கு இந்த நிதியாண்டு சற்று பொருளாதார நெருக்கடி நிறைந்ததாகவே இருக்கும்.’ என ஐசிஆர்ஏ (ICRA)வின் மூத்த பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறியுள்ளார்.

    இந்திய தொழிலாளர்களின் ஊதியம் குறையப்போகிறதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....