Tuesday, May 7, 2024
மேலும்
    Homeசெய்திகள்நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை தொடர்பாக 50 லட்ச ரூபாய் செலவில், 500 மாணவர்களுக்கு...

    நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை தொடர்பாக 50 லட்ச ரூபாய் செலவில், 500 மாணவர்களுக்கு அரசு பயிற்சி…

    பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்கள் 500 பேரூக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, வங்கி சேவை தொடர்பாக 50 லட்ச ரூபாய் செலவில் தமிழக அரசு பயிற்சி அளிக்க உள்ளது

    2022- 2023ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் அதன் தொடர்ச்சியாக தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி படிக்கும் 500 மாணவர்கள் மேலும் தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் 100 ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை, காப்பீடு, மற்றும் வங்கிச் சேவை போன்ற நிதி சார்ந்த தொழில்களில்50 இலட்சம் ரூபாய் செலவில் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடபட்டுள்ளது.

    இந்த அறிவிப்பனை நிறைவேற்ற ஆதிதிராவிடர் நல கல்லூரி விடுதிகளில் தங்கி கல்வி பயிலும் 500 மாணவர்களுக்கு வங்கி மற்றும் நிதி மேலாண்மை சார்ந்த தொழில் பயிற்சியினை (Certificate in Professional Banking and Finance Programme) Tamil Nadu APEX Skill Development Centre for BFSI நிறுவனத்தின் மூலமாக வழங்கவும், தாட்கோ மூலமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 100 ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு பயிற்சியினை Veranda RACE Learning Institute மூலமும் அளிக்கபட உள்ளது. இதற்காக
    49,99,800 ரூபாய்யை அரசு ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கொடுத்து உத்தரவிடுள்ளது…

    உலக மீனவர் தினத்தையொட்டி வித்தியாசமான முறையில் படகுகளில் ஊர்வலம்: மீனவர் கொடி, தேசியக்கொடி ஏற்றி கொண்டாட்டம்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....