Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகால்பந்து உலகக் கோப்பை; அபாரமாக விளையாடிய இங்கிலாந்து..சோபிக்காத ஈரான்

    கால்பந்து உலகக் கோப்பை; அபாரமாக விளையாடிய இங்கிலாந்து..சோபிக்காத ஈரான்

    இங்கிலாந்து மற்றும் ஈரானுக்கு இடையேயான ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    கத்தாரில் நடப்பாண்டிற்கான கால்பந்து உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் நேற்று (21-11-2022) மோதின. தோஹாவில் உள்ள காலிஃபா மைதானத்தில் இந்த ஆட்டமானது நடைபெற்றது.

    ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து அணியினர் சிறப்பாக விளையாடி வந்தனர். அதனின் வெளிப்பாடாக, ஆட்டத்தின் 35-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. இந்த கோலை லூக் ஷாவிடம் இருந்து பந்தைப் பெற்று ஜூட் கோல் போஸ்ட்டுக்குள் அடித்தார்.  

    இதைத்தொடர்ந்து, 43-ஆவது நிமிடத்தில் மாகிர் உதவியுடன் புகாயோ சகா அடித்த கோலால் இங்கிலாந்து 2-0 என முன்னேறியது. அடுத்ததாக ஹாரி கேன் கிராஸ் வழங்கிய பந்தை ரஹிம் ஸ்டெர்லிங் ஸ்கோர் செய்ய, முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 3-0 என முன்னிலையில் இருந்தது.

    மேலும், ஆட்டத்தின் 62-ஆவது நிமிடத்தில் புகாயோ சகா, ஸ்டெர்லிங் உதவியுடன் தனது 2-ஆவது கோலை பதிவு செய்தார். மனம் தளராத ஈரான் ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் தனது முதல் கோலை பதிவு செய்தது. இந்த கோலை மெஹதி தரேமி அடித்தார். 

    இருப்பினும், இங்கிலாந்து 71-ஆவது நிமிடத்தில், ஹாரி கேன் உதவியுடன் மார்கஸ் ராஷ்ஃபோர்டு அடித்த கோலால் 5-1 என முன்னேறியது. அந்த அணியின் ஜேக் கிரேலிஷ் 90-ஆவது நிமிஷத்தில் கோலடிக்க, அணியின் கோல் எண்ணிக்கை 6 ஆனது. இங்கிலாந்து அணியின் பக்கம் முழுமையாக ஆட்டம் நகர்ந்துவிட்டது. 

    இறுதியாக, ஈரானுக்கு கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பை தவறவிடாமல் மெஹதி தரேமி கோலடிக்க, ஆட்டம் 6-2 என்ற கோல் கணக்கில் நிறைவடைந்தது. இங்கிலாந்து அணி 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

    கால்பந்து உலகக் கோப்பை; கத்தார் அணியை வீழ்த்திய ஈகுவடார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....