Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆறு ஆண்டுகளாக சாக்லேட்டுகளில் கஞ்சா விற்பனை; மாட்டிக்கொண்ட இளைஞர்

    ஆறு ஆண்டுகளாக சாக்லேட்டுகளில் கஞ்சா விற்பனை; மாட்டிக்கொண்ட இளைஞர்

    சென்னை அண்ணா சாலையில் உள்ள பான் கடையில் கஞ்சா சாக்லேட் மற்றும் உருண்டைகள் விற்பனை செய்து வந்த பீகார் மாநில இளைஞர் கைது செய்யப்பட்டார். 

    சென்னை, அண்ணாசாலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக அண்ணாசாலை காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அண்ணாசாலை காவல்துறையினர் தாராப்பூர் டவர் அருகே இருக்கும் பிரபல உணவகம் மற்றும் அங்குள்ள கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். 

    அப்போது அங்குள்ள சாய் என்ற பான் கடையில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் பான் உருண்டைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அங்கு குடோனில் இருந்த 38 கிலோ கஞ்சா சாக்குலேட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

    இதையடுத்து, பான் கடை என்ற பெயரில் கஞ்சா விற்பனை செய்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கசரத் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். 

    அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பீகார் மாநிலத்தில் இருந்து ரயில் மற்றும் பிறவழி போக்குவரத்து மூலமாக கஞ்சா பொருள்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அங்கு ஒரு ரூபாய்க்கு விற்கப்படும் கஞ்சா உருண்டை இங்கு 40 ரூபாய்க்கு விற்று வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

    மேலும் முக்கிய சாலையாக இருக்கும் அண்ணாசாலையில் கடந்த 6 ஆண்டுகளாக கஞ்சா விற்பனை நடைபெற்று வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீஸை சுட முயன்ற கைதி – கோவையில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....