Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் லியோ படத்தில் புதிய டெக்னாலஜி; ஆவலில் ரசிகர்கள்!

    விஜய்யின் லியோ படத்தில் புதிய டெக்னாலஜி; ஆவலில் ரசிகர்கள்!

    மனோஜ் பரமஹம்சா லியோ படத்தில் புதிய டெக்னாலஜியை உபயோகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் புரோமோ சமீபத்தில் வெளியாகி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

    லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ் மற்றும் மன்சூர் அலிகான் போன்றோர் நடித்து வருகின்றனர். லியோ படமானது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கும் படங்களின் பட்டியலில் முதன்மையாக உள்ளது. 

    இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் இணையத்தில் வைரலாகின. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பிற்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீர் செல்லும் வீடியோ சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவால் வெளியிடப்பட, அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. படப்பிடிப்பும் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. 

    லியோ படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றி வருகிறார். ஒளிப்பதிவில் பல்வேறு டெக்னாலஜிகளை உபயோகப்படுத்துவதில் ஆர்வமுள்ள பரமஹம்சா தற்போது லியோ படத்திலும் புதிய டெக்னாலஜியை உபயோகப்படுத்தவுள்ளார். அதன்படி, ‘வி ராப்டோர் எக்ஸ் எல்’ (V RAPTOR XL) என்ற நவீன கேமரா ‘லியோ’ படத்தின் படப்பிடிப்புகளில் களமிறங்க உள்ளது. 

    டபிள்யுபிஎல்: பெங்களூர் அணியை பதம் பாரத்த மும்பை இந்தியன்ஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....