Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை - தொழிற்சாலை திருத்த மசோதா நிறைவேற்றம்..

    இனி வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுமுறை – தொழிற்சாலை திருத்த மசோதா நிறைவேற்றம்..

    கர்நாடக சட்டப்பேரவையில் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.

    உலகெங்கிலும் ‘நான்கு நாள் வேலை திட்டம்’ குறித்த பேச்சுகள் சென்றுக்கொண்டிருக்கின்றன. இத்திட்டம் தொடர்பாக சமீபத்தில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வில் ‘நான்கு நாள் வேலை திட்டம்’ வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

    இந்தியாவிலும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாக்கள் குறித்த பேச்சுகள் அடிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று கர்நாடக சட்டப்பேரவையில் தொழிற்சாலைகள் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதன்படி, இனி தொழிற்சாலைகளில் இரவு நேரப் பணிகளில் பெண்கள் ஈடுபடுத்தப்படவும், தொழிலாளர்கள் தொடர்ச்சியாக நான்கு நாள்கள் 12 மணி நேரம் வேலை செய்தால், வாரத்தில் மூன்று நாள்கள் வார விடுமுறை எடுத்துக் கொள்ளவும் சட்ட திருத்த மசோதா வகை செய்கிறது.

    அத்துடன், ஒரு நாளைக்கு பணி நேரத்தை 9 முதல் 12 ஆக அதிகரித்தும், வாரத்தில் 48 மணி நேரத்துக்கு மேல் பணி நேரம் இல்லாமலும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதனால் பணி வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14ன்படி, நாட்டில் அனைத்துப் பாலினருக்கும் சம பணி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தனர். 

    காந்தாரா 2-வில் ரஜினிகாந்த் – என்ன சொல்கிறார் இயக்குநர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....