Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅன்புமணி ராமதாஸ் அறிக்கை எதிரொலி; மாலத்தீவில் சிக்கி தவிக்கும் 48 இந்தியர்கள் மீட்பு

    அன்புமணி ராமதாஸ் அறிக்கை எதிரொலி; மாலத்தீவில் சிக்கி தவிக்கும் 48 இந்தியர்கள் மீட்பு

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கையை ஏற்ற மாலத் தீவுக்கான இந்திய தூதரகம், மாலத்தீவில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

    மாலத் தீவில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிக்காக அழைத்து செல்லப்பட்டு ஊதியத்தையும் உணவையும் தராமல் கொடுமைப்படுத்தப்பட்டு வந்தனர். 

    இதையடுத்து அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 13 ஆம் தேதி அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருந்தார். 

    இந்நிலையில், கொடுமைப்படுத்தப்பட்டு வந்த 13 தமிழர்கள் உட்பட 48 இந்தியர்களை மீட்டு தாயகம் அனுப்புவதற்கான தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருவதாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மாலத்தீவுக்கான இந்திய தூதரகம், “பாதிக்கப்பட்டுள்ள இந்திய தொழிலாளர்களுடன் மாலத்தீவுக்கான இந்திய தூதரகம் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை மாலத்தீவுக்கான இந்திய தூதரகம் கொண்டு சென்று பேச்சு நடத்தி வருகிறது. இது தொடர்பாக இந்திய தொழிலாளர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் இந்திய தூதரகம் செய்து வருகிறது” என விளக்கம் அளித்துள்ளது. 

    வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....