Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு! தில்லியில் பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்

    17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு! தில்லியில் பட்டப்பகலில் அரங்கேறிய கொடூரம்

    தில்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி ஆன்லைன் மூலமாக ஆசிட் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இன்று காலை தில்லி தெற்கு துவாரகா மோகன் கார்டன் பகுதியில் 17 வயதுடைய பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு மர்ம நபர்கள் அந்தப் பள்ளி மாணவி மீது ஆசிட்டை வீசி கொடூர செயலில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் பள்ளி மாணவியின் முகம், கண்களில் பலத்த காயம் ஏற்பட்டது. 

    மாணவி சப்தர்ஜங் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரது முகத்தில் 8 சதவீத தீக்காயம் ஏற்பட்டிருக்கிறது. 

    மாணவியின் மீது ஆசிட் வீசியதைத் தொடர்ந்து, தில்லி மகளிர் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதன்படி சில்லறை விற்பனையில் ஆசிட் விற்பதை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தில்லி மகளிர் ஆணையம் உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. 

    இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே குற்றவாளி ஆன்லைன் மூலம் ஆசிட் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனையை அலறவிட்ட அமைச்சர் மா.சு! மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....