Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் சர்வதேச திரைப்பட விழா; இன்று முதல் தொடக்கம்..

    சென்னையில் சர்வதேச திரைப்பட விழா; இன்று முதல் தொடக்கம்..

    சென்னையில் இன்று தொடங்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடைபற்று வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, இன்று 20-ஆவது முறையாக இந்த விழாவானது சென்னையில் தொடங்கவுள்ளது. 

    இந்த சர்வதேச திரைப்பட விழாவை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைக்க உள்ளார். சென்னை சத்யம் திரையரங்கு வளாகத்தில் உள்ள 4 திரையரங்குகள், அண்ணா திரையரங்கம் உட்பட மொத்தம் 5 திரையரங்குகளில் 4 காட்சிகள் வீதம் ஒவ்வொரு நாளும் 20 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளது. 

    இந்த விழாவில் 48 நாடுகளைச் சார்ந்த 107 திரைப்படங்கள் திரையிடப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட 12 தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்களில் இருந்து சிறந்த படம், சிறந்த இரண்டாவது படம், நடுவர்கள் சிறப்பு விருது, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த ஒலிப்பதிவாளர் ஆகிய 8 விருதுகளுடன் திரையுலகில் சிறந்து விளங்கிவரும் ஒருவருக்கு ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது’ உட்பட மொத்தம் 9 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள்; 

    ஆதார், 

    பிகினிங்,

    கார்கி,

    இரவின் நிழல்,

    கசடதபற

    பபூன் 

    கோட் 

    இறுதிபக்கம்

    மாமனிதன்

    நட்சத்திரம் நகர்கிறது

    ஓ 2

    யுத்த காண்டம்

    சென்னை சர்வதேச திரைப்பட விழா குறித்த தகவல்களுக்கு https://chennaifilmfest.com/ என்ற இணையதளத்தை அனுகலாம். 

    ஒரே பாலின திருமணம்; முக்கிய கோப்பில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....