Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவண்டலூர்: கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் - காவல்துறை வலைவீச்சு!

    வண்டலூர்: கணவன், மனைவியை சரமாரியாக வெட்டிய மர்ம நபர்கள் – காவல்துறை வலைவீச்சு!

    வண்டலூர் அருகே மீன் வியாபாரி மற்றும் அவரது மனைவியை காரில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகில் உள்ள மண்ணிவாக்கம், கே.கே.நகர், மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர், பார்த்திபன். இவருக்கு வயது 52.  இவருடைய மனைவி ஜனகா.பார்த்திபன் மற்றும் ஜனகா இருவரும்  வண்டலூர் அடுத்த ஓட்டேரி அரசு மேல் நிலைப்பள்ளி அருகே மீன் கடை நடத்தி வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று (13-02-2022) காலை காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள், கத்தியால் பார்த்திபன் மற்றும் ஜனகா ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜனகா படுகாயமடைந்தார். 

    யாரும் எதிர்பாராத பொழுது நடந்த இச்சம்பவத்தின்போது, அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு இருவரையும் அனுப்பி வைத்தனர். தற்போது ஜனகாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் காரில் வந்த மர்மநபர்களை தேடியும் வருகின்றனர். 

    முதற்கட்ட விசாரணையின்போது பார்த்திபனின் 15 வயது மகளுக்கு மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பிரேம்குமார் மொபைல் மூலம் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் இதனால் கடந்த டிசம்பர் மாதம் பார்த்திபனின் மகள், பிரேம்குமாரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் வைத்து கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. 

    இந்த கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

    தோவாளை மலர் சந்தையில் மூன்று மடங்கு உயர்ந்த ரோஜா பூக்களின் விலை

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....