Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்ஒரே ஊதுதான்; 55 மெழுகுவர்த்திகளும் ஆஃப்! - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த நபர்!

    ஒரே ஊதுதான்; 55 மெழுகுவர்த்திகளும் ஆஃப்! – கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த நபர்!

    பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 55 மெழுகுவர்த்திகளை அணைத்து உலக சாதனை படைத்துள்ளார்.

    உலக சாதனை படைக்க நினைப்பவர்கள் மிகவும் வித்தியாசமான முறைகளையும் பயிற்சிகளையும் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், ஒரு நபர் கின்னஸ் சாதனை ஒன்றை செய்துள்ளார். 

    பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் துடுர் பிலிப்ஸ். இவர் ஒரே நிமிடத்தில் 55 மெழுகுவர்த்திகளை ஜம்ப் ஹீல் கிளிக் மூலம் ஊதி கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பிரிட்டனின் ஸ்வான்சீயில் உள்ள தேசிய நீர்முனை அருங்காட்சியகத்தில் இவர், இந்தச் சாதனையை படைத்துள்ளார். தற்போது இவர் செய்த சாதனையின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கின்னஸ் உலக சாதனை அமைப்பு தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்தக் காணொளியை பகிர்ந்துள்ளது. இதற்கு பலரும் தங்களது விருப்பங்களையும் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் செய்த சாதனையின் காணொளி தற்போது வைரலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    காதலர் தின ஸ்பெஷல் எங்கே? – ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....