Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட விவகாரத்தில் முதல் மரண தண்டனை; பதற்றத்தில் ஈரான்

    ஹிஜாப் எதிர்ப்பு போராட்ட விவகாரத்தில் முதல் மரண தண்டனை; பதற்றத்தில் ஈரான்

    ஈரானில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் முதன் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது. 

    ஈரானில் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டங்களை பெண்கள் முன் நின்று நடத்தி வருகின்றனர்.  குறிப்பாக மஹசா ஹமினி(22) என்ற பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் அந்நாட்டு காவல்துறை கைது செய்தது. மேலும் அப்பெண் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்தது. 

    மேலும் பெண்கள் அவர்களது ஹிஜாப்பை எரித்தும், முடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக அந்நாட்டு அரசு அடக்குமுறைகளை கையாண்டு வருகிறது. சுமார் 200 பேர் மீது குற்றசாகாடுகளை சுமத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது மேலும் 750 பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. 

    இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அரசு அலுவலகத்துக்கு தீ வைப்பில் ஈடுபட்டதன் காரணமாக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 5 பேருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த போராட்டங்களில் இதுவரை சுமார் 300 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது.

    இதையும் படிங்ககடல் கடந்தாலும் மாறாத பண்பாடு! பாலி நகரில் பிரதமர் மோடிக்கு இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....