Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 

    நாடு முழுவதும் எச்.3என்-2 வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, தொண்டை வலி, உடல் வலி மற்றும் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில் தற்போது பரவி வரும் எச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கு நாட்டில் 2 பேர் உயிரிழந்தனர். ஹரியானா மற்றும் கர்நாடகாவில் தலா ஒருவர் இந்த காய்ச்சலுக்கு உயிரிழந்து இருப்பதாக கடந்த 11 ஆம் தேதி மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது.

    அதே சமயம், இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

    இந்நிலையில், எச்.3என்-2 வைரஸ் காய்ச்சலுக்கு தமிழ்நாட்டில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் தேதி திருச்சியில் இளைஞர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் காய்ச்சல் பரவியதா? என்பது குறித்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையில் உயிரிழந்த இளைஞருக்கு இன்ஃப்ளுயன்ஸா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 

    காமராஜர் சாலையில் அணிவகுத்து வந்த சொகுசு கார்களுக்கு அபராதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....