Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஆஸ்கரை கைப்பற்றிய அவதார்..

    ஆஸ்கரை கைப்பற்றிய அவதார்..

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் 2 படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாகும். இத்திரைப்படத்தை, ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். 

    கடந்த 2009-ம் ஆண்டு ‘அவதார்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதார் திரைப்படம் பல மாயங்களை நிகழ்த்தியது. கூடவே வசூல் சாதனைகளையும் நிகழ்த்தியது. 

    அவதார் திரைப்படம் 2009-ம் ஆண்டு வெளிவந்தபோதே, இத்திரைப்படத்தில் புதுமையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இது ரசிகர்களுக்கு புது வித அனுபவமாக இருந்தது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது வெளிவந்தது. உலகம் முழுவதும் 52,000-த்திற்கும் அதிகமான திரைகளில், 160-க்கும் அதிகமான மொழிகளில் அவதார் திரையிடப்பட்டது. 

    தற்போது வரை அவதார் திரைப்படம் ரூ.17,251 கோடி வசூல் செய்துள்ளது. டாலர் மதிப்பில் இது 2.117 பில்லியன் டாலராகும். அவதார் படம் ஆஸ்கரை வெல்லும் என்ற கருத்து பரவலாக நிலவி வந்தது. 

    இந்நிலையில், அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில், சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதை அவதார்-2 வென்றுள்ளது. 

    முன்னதாக, சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் படமும், சிறந்த பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடலும் வென்று சாதனை படைத்துள்ளது.

    நியூசிலாந்தின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கும் இந்திய ரசிகர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....