Monday, May 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு

    அமெரிக்காவில் இரு குழந்தைகளுக்கு குரங்கம்மை பாதிப்பு

    அமெரிக்காவில் முதல் முறையாக குரங்கம்மை நோய் பாதிப்பினை இரு குழந்தைகளிடம் கண்டறிந்ததாக அந்நாட்டு தேசிய நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. 

    உலகம் முழுவதும் குரங்கம்மை நோய் பரவி வரும் நிலையில், அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஒரு கைக்குழந்தைக்கும் அமெரிக்க நாட்டைச் சேராத அந்நாட்டில் வசித்து வரும் இன்னொரு குழந்தைக்கும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக தெரிகிறது.

    இந்நிலையில், குரங்கம்மை நோய் பாதிப்பினை கண்டறிந்த பின்பு, அது எவ்வாறு பரவியிருக்கும் என்பதனை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதனிடையே, நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் துணை இயக்குனர் ஜெனிஃபர் மெக்குயிஷ்டன் கூறியிருப்பதாவது:

    ஐரோப்பாவிலும் மற்ற பகுதிகளும் குரங்கம்மை பாதிப்பு அதிகமாக பரவி வரும் நிலையில், பெண்களும் குழந்தைகளும் பாதிப்படைவதை பார்த்தோம். அதனால், குழந்தைகள் பாதிப்படைந்தது எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. 

    எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கிறோம். 3 லட்சம் குரங்கம்மை தடுப்பூசிகளை வாங்கி வைத்துள்ளோம். இன்னும் சில நாள்களில் ஒரு லட்சம் மக்களுக்காவது தடுப்பூசி செலுத்தப்படும்.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

    கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....