Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇரண்டு சிலிண்டர் இருந்தால் முதியோர் உதவித்தொகை ரத்து

    இரண்டு சிலிண்டர் இருந்தால் முதியோர் உதவித்தொகை ரத்து

    இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கான, முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் உணவுக்கு வழியின்றியும் உறவினர்கள் ஆதரவின்றியும் தவிக்கும் முதியோர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.

    முதியோர் ஓய்வூதியத் திட்டம் முதல் முறையாக 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 வழங்கப்பட்டது. இந்த நிதி படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது, 1,000 ரூபாயாக வழங்கப்பட்டு வருகிறது. இத்தொகை வங்கிக்கணக்கின் மூலம் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், முதியோர் உதவித்தொகை பெரும் பயனாளிகள் 2 சமையல் எரிவாயு சிலிண்டர் வைத்து இருந்தால், அவர்களுக்கு அரசின் முதியோர் உதவித்தொகை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    இத்தகைய அறிவிப்பால் முதியோர் கலக்கம் அடைந்து உள்ளனர். ஏனெனில், பெரும்பாலான வீடுகளில் இரண்டு  சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வைத்து இருப்பவர்கள், ஓர் சிலிண்டரை திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    சமையல் எரிவாயு சிலண்டரின் வைப்புத்தொகை ரூபாய் 450-ல் இருந்து தற்போது, 2500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. முதியவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த எரிவாயு சிலிண்டரைப் பெற 450 ரூபாய் மட்டுமே கட்டியுள்ளனர். தற்போது, அந்த எரிவாயு சிலிண்டர்களைத் திரும்ப ஒப்படைப்பவர்களுக்கு 450 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மீண்டும் கூடுதல் எரிவாயு சிலிண்டர்களைப் பெற வைப்புத்தொகையாக 2500 ரூபாய் கட்டினால் மட்டுமே அது கிடைக்கும். எனவே, முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் மட்டுமே வைத்திருக்கவேண்டும் என்ற அரசின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    மேலும் அரசு பணியில் உள்ளவர்கள், ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் சொத்து பரிமாற்றம் செய்தவர்கள், சர்க்கரை மற்றும் என்(N) குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள், ரூபாய் 1 லட்சத்துக்கு மேல் நகை கடன் பெற்றவர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....