Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுகேரள ரசிகர்களை பாராட்டிய ஃபிஃபா....மகிழ்ச்சியில் ரசிகர்கள்

    கேரள ரசிகர்களை பாராட்டிய ஃபிஃபா….மகிழ்ச்சியில் ரசிகர்கள்

    கேரள கால்பந்து ரசிகர்களுக்கு சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான ஃபிஃபா தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதும் புகழ்பெற்ற விளையாட்டு போட்டிகளில் முதன்மையானது, கால்பந்து. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் கால்பந்திற்கு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களே உள்ளனர். ஆனாலும், நாளுக்கு நாள் ரசிகர் வட்டம் என்பது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 

    இந்தியாவிலேயே அதிக கால்பந்து ரசிகர்கள் உடைய மாநிலம் என்றால் கேரளா என்று பலரும் கூறுவர். அர்ஜெண்டினா, பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்களுக்கு அவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்துள்ளனர். கேரளா ரசிகர்கள் கால்பந்தின் மீது தீவிரமானவர்கள் என்றே அனைவரும் அறிவர். அதை நிரூபனம் செய்யும் வகையில் மீண்டும் கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    ஆம், 2022-ஆம் ஆண்டிற்கான கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 30 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் வைத்தனர். இந்த கட்-அவுட் சார்ந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆனது. 

    பின்னர், அதே செருபுழா ஆற்றில் பிரேசில் கால்பந்து ஜாம்பவன் நெய்மருக்கு அவரது ரசிகர்கள் கட்-அவுட் அமைத்தனர். இதைத்தொடர்ந்து, ரொனால்டோ-வின் கட்-அவுட்டும் அதே செருபுழா ஆற்றில் நிறுவப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்று கட்-அவுட்டுகளும் இணையத்தை கலக்கின. 

    இந்நிலையில், ஃபிஃபா அமைப்பு கேரள ரசிகர்களின் ஆர்வத்தைப் பாராட்டியுள்ளது. இதற்கு, கேரளாவும் கேரள மக்களும் எப்போதும் கால்பந்தை விரும்புவார்கள். கத்தார் உலகக் கோப்பை விரைவில் தொடங்குவதால் தங்களுடைய ஆர்வத்தை முழு அளவில் வெளிப்படுத்தி வருகிறார்கள். கேரள ரசிகர்களின் கால்பந்து மீதான ஆர்வத்தை முழு அளவில் வெளிப்படுத்தி வருகிறார்கள். கேரள ரசிகர்களின் கால்பந்து மீதான ஆர்வத்தை அங்கீகரித்த ஃபிஃபாவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.

    இதையும் படிங்கஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் உணவு பஞ்சம்.. 2 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....