குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா களமிறங்குகிறார்.
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல், இரண்டு கட்டமாக டிசம்பர் 1 மற்றும் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுகிறது. மோடியும் குஜராத் பகுதியில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி பிரசாரங்களை மேற்கொண்டார். மறுமுனையில் காங்கிரஸ் கட்சிகளும், ஆம் ஆத்மி கட்சிகளும் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டப் பட்டியலில் 160 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத் கட்லோடியா தொகுதில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும், மஜுரா தொகுதியில் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவியும் போட்டியிடுகின்றனர். மேலும், வெளிவந்துள்ள பட்டியலின்படி, பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.