Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெடரல் வங்கி வட்டி விகிதம் மேலும் உயருமா? காத்திருக்கும் ஆபத்து!

    பெடரல் வங்கி வட்டி விகிதம் மேலும் உயருமா? காத்திருக்கும் ஆபத்து!

    அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.75% உயர்த்தியது, இது 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகம். இதனால் உலகின் மற்ற நாடுகளிலும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

    பணவீக்கத்திற்கு எரிபொருள் விலை ஏற்றமே முக்கிய காரணம் என்று அமெரிக்க தொழிலாளர் பணியகத் தகவல்கள் கூறுகின்றன. முன்பு இருந்ததை விட இன்று எரிசக்தி பயன்பாடு அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 35% அதிகமாகி உள்ளது.

    அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், புதன்கிழமை வட்டி விகிதங்களை 0.75% அதிகரித்தது. 1994 ஆம் ஆண்டுக்குப் பிறகு 28 ஆண்டுகளில் இதுவே மிக உயர்ந்த அதிகரிப்பு ஆகும். இந்த வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், எதிர்காலத்திலும் இதுபோன்ற வட்டி அதிகரிப்பை மேற்கொள்ள இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் சில்லறை பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த நடவடிக்கையின் மூலம் சில்லறை பணவீக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என்றும், ஆனால் முழுமையான நிவாரணம் பெற ஜூலை மாதத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்றும் ஜெரோம் பவல் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 0.50% முதல் 0.75% வரை அதிகரிக்கலாம் என்று அவர் மதிப்பிட்டுள்ளார். முன்னதாக மே மாதத்திலும் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியது.

    மே மாதத்தில், அமெரிக்காவில் பணவீக்கம் 8.6 சதவீதமாக பதிவாகியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டத்திற்கு முன்பே, வட்டி விகித உயர்வால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. அமெரிக்க தொழிலாளர் பணியகத்தின் தரவுகள், பணவீக்கத்திற்கான முக்கிய காரணம் எரிபொருளின் விலை உயர்வு தான் என கூறுகின்றன.

    இந்த பணவீக்கமானது உலகெங்கிலும் உள்ள பங்குச் சந்தைகளை வெகுவாக பாதிக்கின்றது.

    மும்பை பங்குச்சந்தை

    மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த திங்கள்கிழமை 1457 புள்ளிகள் சரிந்தது. அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் விளைவு இந்திய ரிசர்வ் வங்கியையும் பாதிக்கும். இதனால் ரிசர்வ் வங்கியும் வரும் நாட்களில் வட்டி விகிதத்தை மேலும் உயர்த்தலாம்.

    ஜெர்மனியின் டாய்ட்ச் வங்கி உலகம் முழுவதும் பணவீக்கம் எவ்வாறு பரவியுள்ளது என்பது குறித்த சமீபத்திய ஆய்வினை தற்போது வெளியிட்டுள்ளது. 111 நாடுகளின் பணவீக்க தரவுகளின் பகுப்பாய்வு அறிக்கையை தற்போது சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் படி பணவீக்கத்தை எதிர்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் மத்தியில் அமெரிக்கா வருகிறது. அதாவது, பல நாடுகளில் பணவீக்க விகிதம் அமெரிக்காவை விட அதிகமாக உள்ளது.

    சராசரி பணவீக்கம் 3% முதல் 7.9% வரை அதிகரித்துள்ளது.
    டாய்ச் வங்கியின் கூற்றுப்படி, 111 நாடுகளின் பணவீக்க விகிதத்தின் சராசரி 7.9% ஆக இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு முன்பு, இந்த சராசரி விகிதம் வெறும் 3% ஆக இருந்தது. மே மாதத்தில் மேற்கு ஐரோப்பா நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. நெதர்லாந்தில், இந்த விகிதம் முந்தைய ஆண்டை விட 8.8% ஆகவும் ஜெர்மனியில் 7.9% ஆகவும் அதிகரித்துள்ளது. பிரான்சில், நிலைமை சற்று சிறப்பாக இருக்கின்றது (5.8 சதவீதம்). ஆனால் பால்டிக் நாடுகளில், இது சுமார் 20% ஐ எட்டியுள்ளது.

    துருக்கி மற்றும் அர்ஜென்டினா அதிக பணவீக்க விகிதங்களைக் கொண்டுள்ளன. மே மாதத்தில் துருக்கியின் பணவீக்க விகிதம் 74% என்ற சாதனை அளவில் இருந்தது. இருந்த போதிலும், வட்டி விகிதங்களைக் குறைக்கும் கொள்கையைப் பின்பற்றுவதாக துர்க்கியின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் அறிவித்துள்ளார். அர்ஜென்டினாவில் துருக்கிக்கு அடுத்தபடியாக 58% பணவீக்கம் அதிகமாக உள்ளது. லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் பணவீக்க விகிதம் தற்போது இரட்டை இலக்கத்தில் உள்ளது.

    நிபுணர்களின் கூற்றுப்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பணவீக்கத்தை நாம் மனதில் வைத்திருந்தால், ஆசியாவின் போக்கு ஒரு நிவாரணமாகத் தெரிகின்றது. சீனாவில், மே மாதத்தில் பணவீக்கம் 2.1% மட்டுமே. ஜப்பானில் இந்த விகிதம் 2.5% ஆக இருந்தது. பிபிசி அறிக்கையின்படி, பணவீக்க விகிதத்தை 2% வரை கட்டுப்படுத்த ஜப்பான் மத்திய வங்கி முடிவு செய்துள்ளது. அங்கு சம்பளம் கிட்டத்தட்ட நிலையானது. எனவே, 2.5% பணவீக்கம் நுகர்வோரையும் பாதிக்கின்றது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....